Monday, November 30, 2015

நபி முகம்மத் (ஸல்) அவர்களின் பெருந்தன்மை

பெருந்தன்மை !!
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இதற்கு முன்பு துமாமா (ரலி) அவர்கள் நிராயுதபாணியாக முஸ்லிம்களிடம் சிக்கிக் கொண்டபொழுது அவர்களிடம் எப்படிப்பட்ட சகிப்புத தன்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள் என்பதை சுருங்கப் பார்த்தோம்.


பெருந்தன்மை !!


ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது ஸைது இப்னு சனா என்கிற யூதர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுத்த கடனை திரும்பக் கேட்டு வருகிறார்.
அவ்வாறு வந்தவர் கடுமையான வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பிரயோகம் செய்கின்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மிக அருகில் அமர்ந்திருந்த அவர்களது தோழர்கள் கொதிப்படைந்து வாளை உருவிக்கொண்டு எழுகிறார்கள் அவ்வாறு எழுந்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விடுகிறார்கள்
தடுத்துவிட்டு மேலும் கூறுகிறார்கள் தோழர்களே அவரைப் பேசவிடுங்கள் அவர் என்னைப் பேசுவதற்கு உரிமை பெற்றுள்ளார் நான் அவரிடம் கடன் பெற்றுள்ளேன் மேலும் அவருக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் தவனையையும் நான் மீறி விட்டேன் அதனால் உரிமையுடையவருக்கு அவருடைய உரிமையை விட்டு விடுங்கள் என்றுக் கூறி தமது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.
அவ்வாறு தமது தோழர்களை கட்டுப்படுத்தி விட்டு இப்னு சனாவைப் பார்த்து கூறுகிறார்கள் இப்னு சனாவே இன்னும் நீங்கள் என்னை எவ்வளவு பேசவேண்டுமோ பேசுங்கள் காரணம் உங்களிடம் நான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க நான் வாக்களித்த தவனை முடிந்து விட்டதால் நான் சகித்துக் கொள்கிறேன் என்றுக் கூறிவிடுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இந்த பெருந்தன்மை இப்னு சனா அவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது அதற்கு மேல் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகிறார். அவ்வாறு திரும்பிச் சென்றவர் சிறிது நேரங்களிலெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருந்த அதே அவைக்கு தனது குடும்பத்தாருடன் வருகிறார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி தாமும் தமது குடும்பத்தினரும் இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறி இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார். . . .அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். அல்குர்ஆன் 5:119இப்னு சனா அவர்கள் இஸ்லாத்தில்; இணைந்து கொள்வதற்கு நபிகளாரின் பெருந்தன்மை ஒருக் காரணமாக அமைந்து விடுவதுடன் மேலும் ஒருக் காரணத்தையும் அவ்விடத்தில் அவர் கூறுகிறார் இதற்கு முந்தைய வேதங்களில் இறுதி நபியுடைய வருகையை படித்துள்ளேன் அதில் இறுதி நபியிடம்; அதிகமான சகிப்புத் தன்மையும், பொருமையும் இருக்கும் என்று எழுதப்பட்டதை வாசித்திருக்கிறேன் அதை இந்த நபியிடம் சோதிப்பதற்காகவே அவ்வாறான கடுமைத் தனத்துடன் நடந்து கொண்டேன் முந்தைய வேதங்கள் கூறிய சகிப்புத் தன்மையும், பொருமையும் இந்த நபியிடம் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன் அதனால் அவர்கள் கொண்டுவந்த சத்திய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் எனவும் கூறினார்.
இதைக்கேட்டு நபித்தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள் நபிகள் நாகயம் கையாண்ட பெருந்தன்மையை அவர்களது பிரிவிக்குப் பின் அவர்களும் தங்களுடைய ஆளுகையின் கீழுள்ள மக்களிடம் கையாண்டார்கள் அதனால் அவர்களிடத்திலும் அன்றைய வல்லரசுகள் மண்டியிட்டன.
இதன் மூலம் முஸ்லிம்கள் பெறும் படிப்பினைள்
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே !
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார் ? அதை அவருக்கு பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். .. 2:245பொருள் வசதியற்ற தேவையுடைய மக்களுக்காக, பொருள் வசதியுள்ளவர்கள் மீது கடனை கடமையாக்கினான். அழகிய முறையில் அவரிடமிருந்து வாங்கியது போல் குறிப்பிட்ட தவனையில் அழகிய முறையில் திருப்பி தந்து விடவேண்டும். திருப்பிக் கொடுக்கும் தவனை வரும்போது ஓடி ஒளிந்து விடக்கூடாதுகடன் பெறுவதற்காக கடன் கொடுப்பவரிடம் பேசிய பவ்வியமான வார்த்தைகள் கடனை திருப்பிக் கொடுக்கும்போதும் கையாளவேண்டும். கடன் திருப்பிக் கொடுக்கும் தவனை முடிந்து கடன்காரர் கடனை திருப்பிக் கேட்க வரும்போது கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் வாங்கும் Nபுhது பேசிய பவ்வியமான வாரத்தைகள் கொடுக்கும் போது பேசுவதில்லை வித்தியாசமாக பேசுவதும் சில நேரங்களில் முடிந்தால் பார்த்துக் கொள் என்றுக் கூறுவதையும் இன்று கண்டு வருகிறோம். அது மட்டுமல்லாது கடன் காரன் கடனை கேட்கும்போது இவருடன் யாராவது கூட இருந்து விட்டால் அவரை வைத்துக் கொண்டு ஏன் கேட்டாய் ? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று வரட்டு கௌரவம் பேசுவார்கள் இதையேக் காரணமாக்கி இன்னும் இழுத்தடிப்பார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனை ஒப்பந்தம் செய்து கொண்ட தவனையில் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வரும்போது இப்னு சனா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முன்னிலையில் தான் கடுமையாக நடந்துகொள்கிறார்.எனது தோழர்கள் முன்னிலையில் எவ்வாறு நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாம் என்று கடிந்து கொள்ளவில்லை.
கடனை குறித்த தவனையில் செலுத்தி விடவேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு சனா அவர்களுடைய செயல்பாட்டை அங்கீகரித்தன் மூலம் நபிகள் நாயகத்தின் உம்மத்துக்களாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு இறை நம்பிக்கையாளரின் கடன் நிறைவேற்றப்படும் வரை அவரது உயிர் அவரது கடனுடன் தொங்கிக் கொண்டிருக்கும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
வாங்கிய கடனை குறிப்பிட்ட தவனையில் திரும்ப செலுத்தி விட முடியாத நிலை ஏற்பட்டால் கடன் கொடுத்தவரிடம் கடன் பெற்றவர் தனது தவனையை மேலும் புதுப்பித்துக் கொல்ல வேண்டும் கடன் கொடுத்தவர்கள் கடன் பெற்றவர்களுக்கு மேலும் பலதவகைனகளை கொடுக்கச் சொல்லி மார்க்கம் கூறுகிறது அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும். ...2:280
அல்லாஹ்வுக்காகவே, அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தே வசதி படைத்தவர் வசதி இல்லாதோருக்கு கடன் கொடுத்து உதவுகின்றனர் கடன்பட்டவர் உண்மையிலேயே கடனை திருப்பிக் கொடு;க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் அந்த நிலையை இவர் கண்ணுறுபவராக இருந்தால் அல்லாஹ்வுக்காகவென்றே கொடுத்த கடனை தள்ளுபடி செய்து விடவேண்டும் அல்லது அதை தர்மமாக விட்டு விடவேண்டும் இவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் நன்மையை அதிகமாக்குவான் அதனால் தான் கடனைப் பற்றி சொல்லும் போது அழகிய கடன் அல்லாஹ்வுக்காக கொடுப்போர் யார் ? என்றுக் கூறுகிறான் மறுமையை நம்பி வாழக் கூடிய முஸ்லிம்கள் தன்னுடைய சகோதரனுக்கு கொடுத்துதவிய கடனை திரும்ப பெறமுடியாத பட்சத்தில் அதை தர்மமாக ஆக்கிவிடுவது மிச் சிறந்த அமல்களில் ஒன்றானதாகுமு;.நீங்கள் அறிந்து கொண்டால் ( கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை ) அதை தர்மமாக்கி விடுவது உங்களுக்கு சிறந்தது 2:280
மேற்கத்திய சமுதாயத்தவர்களே !!
இப்னு சனா அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகத்துடன் நடந்து கொண்டவிதம் அவர்களது அருகில் அமர்நதிருந்த தோழர்களுக்கு மாபெரும் ரோஷத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது ஏற்படுத்தத் தான் செய்யும் உங்களில் எவரும் தன்னுடைய தந்தை , தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும் வரை இறை நம்பிக்கையாளராக முடியாது. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்
அவர்களது தோழர்கள் இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய விலையை நிரணயிக்கக் கூடிய எந்தப் பொருளையும் விட தன்னைப் பெற்றெடுத்தவர்களையும் விட தன்னுடன் பிறந்தவர்களையும் விட நபிகள் நாயகத்தை உயிரிலும் மேலாக கருதியவர்களே அவ்விடத்தில் அமர்ந்திருந்தார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு முன்னிலையில் சிறிய ஒரு கடன் தொகைக்காக கடுமையான வார்த்தைகளைக கொண்டு திட்டும்பொழுது கொதிப்படைந்த தனது தோழர்களை கட்டுப் படுத்தி விடுகிறார்கள், அவர்கள் நினைத்திருந்தால் ஒரு கண் அசைவு போதும் அந்த தோழர்களுக்கு கண்இமைக்கும் நேரத்திற்குள் அடித்து கொலுவில் தொங்க விட்டிருப்பார்கள் அத்துடன் எங்களை எதிர்ப்பவர்களுக்கு அதுதான் கெதி என்று கூறியிருக்க முடியும் காரணம் இன்றிருப்பது போல் வல்லரசுகள் அன்றும் இருந்தன அந்த வல்லரசுகள் இவர்களுக்கு பயந்திருந்தார்கள் இன்றைய முஸ்லிம் நாடுகள் போல் அவர்கள் பீதியில் உறைந்திருக்கவில்லை.
இத்தனைப் பெரிய அதிகாரங்களை உடையவர்களுக்கு மத்தியில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் நபிகள் நாயகத்தை கடுமையான வாரத்தைகனைப பேசும் போது அமைதி காத்த அந்த உத்தம நபியவர்களுடைய தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தீவிரவாதியாக சித்திரம் வரைந்து வெளியிட்டீர்களே !
செய்யாத குற்றத்திற்காக ஆப்கான் மக்களையும், ஈராக் மக்களையும், லெபனான் மக்களையும் கொன்று குவித்த ஜார்ஜ் புஷ் , டோனி பிளேர் தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தொங்க விட்டு முதல் பரிசை எப்பொழுது வெல்லப் போகிறீர்கள்.
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? 3:71.
''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. 5:72 .


Sunday, November 29, 2015

நபிகளாரின் திருமணங்கள்

அன்னை கதீஜா (ரலி)..

அன்னை கதீஜா (ரலி)..
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

அண்ணல் நபி (ஸல்) அவர்களை பல கோணலாக சித்தரித்து சித்திரம் வரைந்து வெளியிட்டது மேல்படியார்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று அல்லதுஇ மததுவேஷத்தை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீவிரவாதியாக இருந்திருந்திருப்பார்களேயானால் அவர்களுடைய சமகாலத்து எதிரிகளை வெற்றி கொண்ட பொழுது அவர்களுடைய எதிரிகளின் மீது தீவிரவாதத்தை ஏவி இருப்பார்கள் மாறாக மன்னித்து விட்டு விடுகிறார்கள் என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

அவர்களுடைய அடுத்த சித்திரம் இரண்டு பெண்களுடன் நேரடியாக சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்தனர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டுதான் பல பெண்களை திருமனம் முடித்தனரா ? அல்லது அத்திருமனங்கள் அனைத்தும் தியாகத்தின் அடிப்படையில் அமைந்தவைகளா ? என்று பார்ப்போம்.

( முதல் மனைவி ) அன்னை கதீஜா (ரலி) அன்ஹா அவர்கள்

மக்கா நகரிலிருந்து சிரியாவுக்கு சென்று வியாபாரம் செய்யும் முன்னனி நிருவனங்களில் அன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுடைய வியாபார நிருவனம் முதல் இடத்தை பிடித்திருந்தது. எவ்வாறெனில் 300 க்கும் மேற்பட்ட ஒட்டகக்கூட்டம் வியாபார பொருட்களின் பொதிகளை சுமந்து கொண்டு அணி வகுத்துச்செல்லும். அதுவல்லாமல் அவர்களிடத்திலே விலைமதிப்புள்ள செந்நிற ஒட்டகங்களும் பலநூறு இருந்தனஇ அவர்களுடைய வியாபார நிருவனத்தை பொறுப்பேற்று நடத்துவதற்கு தகுதியான ஒருவரை அன்னையவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை அபூதாலிப் அவர்களிடம் வளர்ந்துவரும் முஹம்மது அவர்கள் மக்கா நகரத்தின் ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் உள்ளத்திலும் அல்அமீன் (நேர்மையாளர்) அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் நம்பகத் தன்மையுடன் வாழ்ந்து வந்தார்கள். அதனால் முஹம்மது அவர்களை தனது வியாபார நிருவனத்தை பொறுபேற்று நடத்த தகுதியானவர் எனும் முடிவுக்கு வருகிறார்கள் அதன்படி அபூதாலிப் அவர்களிடம் சொல்லி அனுப்புகிறார்கள்இ அபூதாலிப் அவர்களும் அண்ணல் அவர்களும் ஆலோசனை செய்து முடிவில் பெரியநிருவனத்தில் வேலை கிடைத்தமைக்கு படைத்தவனுக்கு இருவரும் நன்றி கூறிக்கொண்டு சம்மதிக்கிறார்கள். அண்ணல் அவர்கள் அன்னை அவர்களின் நிருவனத்தில் நேர்மையான பணியாளராக பணியாற்றி வருகிறார்கள்.

அன்னையவர்களுடைய முந்தைய கனவர் இறந்து நீண்டநாட்கள் மறுமனம் புரியாமல் இருந்ததாலும் அன்னையவர்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் மிகப்பெரும் வசதி படைத்தவர்கள் என்பதாலும் அன்னை அவர்களோடு சமநிலையில் உள்ளவர்கள் பலர் அவர்களை மனமுடிக்க முனைந்தனர் அன்னை அவர்கள் அதற்கு இனங்காமல் இருந்து வந்தனர்.

அன்னையவர்களிடத்தில் பணியாற்றி வந்த அண்ணல் அவர்களின் நம்பகத்தன்மைஇ அமாணிதம் பேணல்இ உண்மை பேசுதல் போன்ற நற்குணங்களின் பால் அன்னையவர்கள் கவரப்படுகிறார்கள் அதனால் தனது வாழ்க்கை துனைவராக்கிக்கொள்ள விரும்பி அண்ணல் அவர்களுக்கு தூது அனுப்புகிறார்கள்இ

அண்ணல் அவர்கள் அன்னை அவர்களிடத்தில் பணியாற்றும் போது அவர்களுடைய ஒழுக்கத்தையும்இ நேர்மையையும் அறிந்திருந்தார்கள் என்பதால் மனமுடித்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்கள்இ திருமனம் நடந்தேறுகிறதுஇ ஒருவருக்கொருவர் புரிந்துணர்வின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை இன்பகரமாக செல்லுகிறது எந்தளவுக்கென்றால் அன்னையவர்களுடைய மறைவுக்குப்பின் அன்னையவர்களுடன் இணைந்து வாழ்ந்த பசுமையான நினைவுகள் அண்ணல் அவர்களுடைய இறுதிப்பயணம் வரை வாட்டி வதைத்தது என்றால் மிகையாகாது.

அரேபியர் ஒருவருக்கு பல மனைவிகள் இருப்பதையே கவுரவமாக கருதி வாழ்ந்த காலமது. ஒரு பேரீத்தம்பழத்தை பெற்றுக்கொளள முடியாத பரம ஏழையிடத்திலும் கூட பல மனைவியர் இருந்ததாக வரலாறு கூறுகிறதுஇ ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செல்வ சீமாட்டியை மனந்ததன் மூலம் அவர்களும் செல்வ சீமானாவகவே வாழ்ந்தார்கள்இ அவ்வாறு இருந்தும் அன்னை அவர்களோடு வாழ்ந்த காலத்தில் வேறொரு பெண்ணை மனமுடிக்க வில்லைஇ

அன்னையவர்கள் ஏற்கனவே மனமுடித்து மூன்று குழந்தைளுக்கு தாயானவர்கள்இ குறைந்தது அண்ணல் நபி (ஸல்) அவர்களை விட பதினைந்து வயதிற்கு மூத்தவர்களும் கூடஇ எந்த ஒரு இளைஞனும் தனது முதல் தாரம் கண்ணிப் பெண்ணாக அமைய வேண்டும் என்றே ஆர்வம் கொள்வான்இ சூழ்நிலை காரணமாக விதவை அமைந்து விட்டாலும் அடுத்தது ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடிக்க ஆர்வம் ஏற்படும் இதுசகஜம். ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அதுமாதிரியான சிந்தனை அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் ஏற்பட வில்லை மரணித்தப்பின்பும் ஏற்படவில்லை அது மட்டுமல்லாமல் அன்று அவர்கள் ஒரு கண்ணிப் பெண்ணை மனமுடித்திருந்தால் அதை அன்னையவர்களும் எதிர்க்கமுடியாதுஇ அன்றைய சமுதாயமும் எதிர்க்க முடியாது காரணம் அன்றைய அரபுலக ஆண்வர்க்கத்தின் கலாச்சாரமே அதுவாகத்தான் இருந்தது.

ஏன் இதை நாம் குறிப்பிடுகிறோம் என்றால் அண்ணல் அவர்களை ஒரு பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் வர்ணிக்கப்படுவதால் இதை சுட்டிக் காட்டுகிறோம் மேலும் விஷயத்திற்கு வருவோம்.

அன்னை அவர்கள் மரணிக்கும் பொழுது அண்ணல் அவர்கள் 48 வயதை அடைந்திருந்தார்கள்.

நாமும் மனிதர்கள் என்கிற ரீதியில் நம்முடைய அனுபவ ரீதியாக சில விஷயங்களை அறிவுப் பூர்மாக சிந்திப்போம். 25 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பருவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் ? இந்த பருவத்தில் அதுவும் அடுத்த மனம் புரிவதற்கு எந்த தடையுமில்லாத காலத்தில் தனது நேசமான ஒரே மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் மேற்கத்தியர்கள் கூறுவது போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்பித்தராக இருந்திருப்பார்களென்றால் அன்னையவர்களிடம் குவிந்து கிடந்த செல்வத்தை பயன்படுத்தி பலபெண்களுடன் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் காரணம் அது அவர்களுக்கு சரியான தருனமாகும். இன்று நாம் பார்க்கிறோம் லட்சாதிபதிஇ கோடீஸ்வரர்இ மில்லியனர்இ பில்லியனரிடம் எவ்வளவு தான் மனம் கவர்ந்த ஒரு மனைவி இருந்தாலும்இ அந்தப்புறத்தில் ஒன்றல்லாமல் பலர் ஆசைநாயகிகளாக இருப்பதை பார்க்கிறோம். பெண்பித்தர் என்று வர்ணிக்கப்படும் ஒருவர் தனது வசதியை பயன்படுத்திக் கொண்டு இப்படித் தான் வாழ்வார்.

ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

எ இடையூறு இல்லாத பலதார மனக் கலாச்சாரம் நடந்து கொண்டிருந்த காலத்தில்
எ தான் பெரும் கோடீஸ்வரராக இருந்த நிலையில்
எ முறுக்கேரிய நடுநிலை வாலிபப் பருவமாக இருந்த நிலையில்

இத்தனை சாதகமான நிலையிருந்தும் காலச்சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளாமல்; தன்னைவிட வயது முதிர்ந்த மனைவியுடன் பாசநேசமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்இ வாலிபம் முழுவதும் அந்த மனைவியுடன் முற்றுப்பெறுகிறது

தான் பிறந்து ஓடியாடி வளர்ந்த வீட்டை விட்டுஇ பெற்றார்இ உற்றார் உறவினர்களைப் பிரிந்து எங்கிருந்தோ அமானிதமாக தன்னிடம் வந்து இணைந்து கொண்ட ஒரு ஜீவன் தான் மனைவி என்கிற பிறர் வீட்டு அடைக்கலப்பொருளாகும்இ இந்த பெண் தியாகியின் மீது ஒவ்வொரு கணவன்மாரும்; எவ்வாறு பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா(ரலி)அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து உலகம் படிப்பினை பெறவேண்டும்.

தனக்கு மனைவியாக வருபவள் கண்ணிப் பெண்ணாக இருந்தாலும் சரிஇ கைவிடப்பட்ட அபலைப் பெண்ணாக இருந்தாலும் சரிஇ விதவையாக இருந்தாலும் சரி வயதில் மூத்தவளாக இருந்தாலும் சரி ஒருவனுக்கு மனைவி என்று வருபவள் அவனுடைய விதியில் இறைவனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவளாகும். அதனால் எந்நிலையில் ஒருத்தி தனக்கு மனைவியாக வந்தாலும் அவளுக்கு முதலில் தன்னுடைய இதயத்தில் இடமளித்து புரிந்துணர்வுடன் பாசநேசமாக வாழவேண்டும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை விட வயது முதிர்ந்தவர்களுடன் தமது இளமைக்காலத்;தை கழித்த தியாக வரலாற்றிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

இதனால் தான் அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வின் மீதும்இ இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்துஇ அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21 என்றுக் கூறினான்.
ஒரு மனிதரைப்பற்றி அவருடைய உள் அந்தரங்க வாழ்க்கைகளை அக்குவேறு ஆனிவேறாக மற்றவரை விட அவருடைய மனைவியால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையை அவர்களுடைய மனைவி என்கிற முறையில் அன்னையவர்கள் அதிகம் தெரிந்திருந்ததால் அண்ணல் அவர்களுக்கு இறைச்செய்தி இறங்கியதும் அன்னை அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைகிறார்கள்இ மேலும் அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக இதற்கு முந்தைய வேதங்களை கற்றறிந்த தனது உறவுக்காரரிடம் அழைத்துச்சென்று தனது கணவருக்கு இறைச்செய்தி இறங்கிய செய்தியை கூறுகிறார்கள் குர்ஆனுக்கு முந்தைய அனைத்து வேத கிரந்தங்களிலும் ரிக்வேதம் உட்பட முஹம்மது நபி அவர்களுடைய வருகையை உறுதிபடுத்தி இருப்பதை அவர் அறிந்தவர் என்பதால் அண்ணல் நபி அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் அவர்கள் வஹீ அறிவிக்கும் போது நடந்த நிகழ்வுகள்இ சூழல்களை வைத்து அவரே இறைத்தூதர் என்றும் அவரே இறுதி நபி என்றும் உண்மைபடுத்தி முஹம்மதை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்இ நான் தள்ளாடும் முதுமையில் இருக்கிறேன் இன்னும் சிலகாலம் வாழ்வதாக இருந்தால் இவர்களை இந்த மக்கள் நாட்டை விட்டு விரட்டுவதை நான் கான்பேன் என்றும் எச்சரிக்கைப படுத்தி அனுப்பி வைக்கிறார். அவர் பெயர் நவ்பல் இப்னு வரக்கா.

அத்துடன் அன்னையவர்கள் ஈமான்கொண்டு முதல் இறைவிசுவாசியாகி விடுகிறார்கள்இ இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களுடைய முழுசெல்வத்தையும் தாரைவார்த்து விடுகிறார்கள்.செல்வ சீமாட்டியான அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அண்ணல் அவர்களோடு தாங்களும் பலகஸ்டங்களை அனுபவித்துள்ளார்கள் அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் மீது குறைஷிகள் ஏவிய பொருதார தடைக்கு அன்னை அவர்களும் இலக்கானார்கள்இ இறைச்செய்தி வந்து கொண்டிருந்த காலங்களில் கூடவே இருந்தார்கள்இ இடையில் இரண்டு வருடங்கள் இறைச்செய்தி இறங்காமல் இருந்த காலங்களில் அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டானோ என்று அண்ணல் அவர்கள் அதிகம் கவலைக்குள்ளான நாட்களில் அண்ணல் அவர்களுக்கு ஆருதல் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த சம்பவம் அன்னையவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடத்தில் இறங்கும் இறைச்செய்தியின் மீது அதிகம் நம்பிக்கை சேர்த்ததுஇ காரணம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள இறைச்செய்;தி என்று சுயமாக எதையும் கூறக் கூடியவர்களாக இருந்தால் தினமும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்க முடியும்இ இறங்கிக் கொண்டிருப்பது இறைவேதம் தான் என்பதை மக்களிடத்தில் உறுதி படுத்துவதற்காக இதுவும் இறைவனுடைய ஏற்பாடு தான் என்பதற்கு வேரு அத்தாட்சி தேவை இவ்லை.

பெண் பித்தர் என்று மத துவேஷிகளால் கூறப்படுவது உண்மையானால் அன்னையவர்களோடு வாழ்ந்த 25 - 48 அதாவது 23வருட வாலிப பருவகாலத்தில் பல பெண்களை மனந்திருப்பார்கள். மனந்திருக்க வேண்டும். அவ்வாறு மனந்திருந்தால் எவரும் எதுவும் சொல்ல முடியாது காரணம் பலதாரமனம் என்பது இன்றைய மக்களிடத்தில் மோசமான சிந்தனை இருந்தாலும் அன்றைய மக்களிடத்திலே அது சாதாரணமாகவே கருதப்பட்டது அவ்வாறு சாதாரணமாக கருதபட்டக் காலத்தில்இ காலத்தின் சூழலை சாதகமாக்கி கொள்ளாமல் தனது நேசமான ஒரு மனைவியுடன் ஒரு இலட்சியத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கை ( ஓறிறை கொள்கையை ) நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். இன்றல்லஇ அன்றல்லஇ என்றும் இதுபோன்ற திடகாத்திரமான கட்டுப்படுத்தும் மனநிலை உள்ள முஹம்மது நபியை போல ஒரு தலைவர் எவரும் இருக்க முடியாதுஇ இருந்ததாக வரலாறு இவ்லை.

இரண்டு பெண்களுடன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல் சித்தரித்திருந்த அச்சித்திரம் அவர்களுடைய கேடுகெட்ட கலாச்சாரத்தை பட்டவர்த்தனமாக பறை சாட்டுவதைக் காணலாம்.

பிஞ்சிலே பழுத்து வெம்பி விடும் இளைஞர்இ இளைஞிகள் அவர்களிடத்திலே மலிந்து கிடப்பதுடன்

பெண்களுடனான உல்லாசம் ஒன்று தான் சொர்க்கம் என்று நினைத்து அதில் வீழ்ந்து அதிலிருந்து எயிட்ஸ் எனும் கோடியநோயை விலைகொடுத்து வாங்கி தானும் சமுதாயத்தில் தீண்ட தகாதவர்களாகிஇ அதை பிறருக்கும் அறிமுகம் செய்த அவர்களே பெண் பித்தர்கள் என்பதை அவர்கள் பிறருக்காக வறைந்த சித்திரம் அவர்களை பறைசாட்டுகிறதுஇ தனது எதிரிலுள்ளவர்களை குறை கூற உயர்த்தும் விரலுக்கு அடுத்த விரல் தன்னை சுட்டிக் காட்டுவதை சில மேதாவிகள் அறிய மாட்டார்கள்இ அச்சித்திரம் வரைந்தவனையும்இ அவனது சமூகத்தினரின் வழி தவறலையும் சுட்டிக்காட்டுவதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் அச்சித்திரம் முழுக்கஇ முழுக்க மேற்கத்திய அவர்களின் கேடுகெட்ட மிருகப்புணர்ச்சி கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டுகிறது. மாறாக உயர்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை அல்ல.


அன்னை ஸவ்தா (ரலி)..

அன்னை ஸவ்தா (ரலி)..
அண்ணல் நபி (ஸல்) அவர்களை பெண் பித்தர் போன்று சித்திரம் வரைந்து வெளியிட்டது மேற்கத்தியர்களுடைய மததுவேஷத்தை வெளிப்படுத்திற்றுஇ அல்லது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம்இ அதனடிப்படையில் அண்ணல் நபியவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அவர்களது இளமைப்பருவத்தில் அவர்களை விட வயது முதிர்ந்த அன்னை ஹதீஜா ரலி அவர்களோடு வாழ்ந்த காலத்தில் பலபெண்களை மனந்திருப்பார்கள்இ ஆனால் அன்னையவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் அன்னை ஹதீஜா (ரலி) அன்ஹா அவர்களுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாசநேசத்துடன் வாழ்ந்த வாழ்க்கை வரலாறை சுருங்கப்பார்த்தோம்இ இப்பொழுது அண்ணல் நபி(ஸல்)அவர்களது அடுத்த திருமனங்களை சுருங்கப் பார்ப்போம் .

அன்னை ஸவ்தா (ரலி) அன்ஹா அவர்கள்

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் ஒருவராவார்கள்இ மக்காவில் இஸ்லாம் முளைவிட ஆரம்பித்த காலத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளிடம் சொல்லொனா வசைமொழிகளுக்கும்இ கொலைவெறி தாக்குதலுக்குட் ஆளான காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவை விட்டு அபிஸீனியவிற்கு இடப்பெயர்ச்சி ( ஹிஜ்ரத் ) செய்தபோது அதில் அன்னையவர்களும் அவர்களது கனவர் சக்ரான் பின் அம்ர் அவர்களும் இடம்பெற்றனர்இ அபிஸீனியாவிற்கு சென்று மிகவும் கஷ்டபட்டு குடும்பம் நடத்துகிறார்கள் ஒரு நாட்;டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதிகளாய் வருபவர்களுடைய நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்தளவுக்கு சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரேக் காரணத்திற்காக.

அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கணவை கான்கிறார்கள்இ ஒருநாள் அண்ணல் அவர்கள் அன்னையவர்களது இல்லத்தில் நுழைந்துஇ அன்னையின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில்இ அன்னையவர்களது மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவினைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுதுஇ நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார்கள். இன்னும் எனது மரணம் நெருங்கி விட்டதுஇ எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை பகர்கிறார்கள். கூறிய சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டும் சக்ரான் (ரலி) அவர்கள் மரணமடைந்து விடுகிறார்கள். தனது கணவர் இறந்தவுடன் கைக்குழந்தைகளுடன் மக்காவுகு;கு திரும்பி விடுகிறார்கள்.

அன்னையவர்களின் தோழியர்களில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்பவர்கள் அன்றைய மக்களிடத்தில் அதிக நன்மதிப்பை பெற்றவர்களாயிருந்தார்கள்இ அன்னையவர்கள் கண்ட கணவை அவர்கள் அறிந்திருந்ததால் அவர்களை அண்ணல் அவர்களுக்கு திருமனம் செய்து வைத்து விட முனைப்புடன் செயல்படுகிறார்கள்.
ஒருநாள் கவ்லா (ரலி) அவர்கள்இ இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து கணவரை இழந்து பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தனிமையில் மிகவும் சிரமப்படும் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களது அவல நிலையையும்இ இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்திருக்கும் துன்ப நிலையையும் எடுத்துக் கூறி நீங்கள் கதீஜா (ரலி) அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது ? நீங்கள் திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

என்னை யார் மணந்து கொள்வார்கள்இ ? இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் ? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்.
( பெண் பித்தராக அவர்கள் இருந்திருப்பார்களேயானால் குறைந்தபட்சம் தனது மனைவி இறந்த பிறகாவது அடுத்த மனைவியை தேடிக்கொள்ளும் வழியை கண்டறிந்து துணையை அடைந்திருப்பார்கள் மாறாக என்னை யார் மணந்து கொள்வார்கள்இ இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று கேட்கிறார்கள். என்றால் ? அவர்களைப் பற்றின எந்த வரலாற்றுக் கிரந்தத்தை படித்து விட்டு அவ்வாறான ஒரு கேடுகெட்ட சித்திரத்தை வரைந்து தனது மதவெறியை தனித்திருப்பார்கள்இ அந்த கழிசடைகளுடன் இன்னும் பலரும் இணைந்து அயோக்கியத்தனத்திற்கு ஆதரவளித்திருப்பார்கள் ? என்பதை நடுநிலை சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. )

நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளச் சம்மதித்தீர்;கள் என்று சொன்னால்இ நான் உங்களுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண்ணை அணுகி அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்புகின்றேன் என்று கவ்லா (ரலி) அவர்கள் கூறி இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட செய்தியை ஸவ்தா (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்;இ அன்னையவர்கள் அபிசீனியாவில் இருமுறை கண்ட கணவையும்இ அவர்களது கணவர் சக்ரான் (ரலி) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்பு கணவுக்கு விளக்கமளித்ததுடன் அண்ணல் அவர்களை திருமனம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்து திருமனத்திற்கு சம்மதிக்கிறார்கள் .

திருமனம் நடந்தேறுகிறதுஇ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்களுக்கு 400 திர்;ஹம்களை மஹராகக் கொடுத்து மனமுடிக்கிறார்கள்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போன்று அண்ணல் அவர்கள் ஒரு பெண் பித்தராக இருந்திருப்பார்களேயானால் தனது இரண்டாவது திருமனத்தையேனும் ஒரு கண்ணிப்பெண் மூலம் நடத்தி இருந்திருப்பார்கள்இ
அவ்வாறில்லாமல் குழந்தைகளுடன் கணவனை இழந்த ஓர் விதவையை மனக்கொடை வழங்கி இரண்டாம் தாரமாக மனமுடித்துக் கொள்கிறார்கள்இ
இது போன்று ஒரு சமுதாய சீர்திருத்தவாதியைஇ தீர்க்கதரிசியை உலகில் எவரையேனும் எவராலும் கோடிட்டு காட்ட முடியுமா ? அறவே முடியாது
வாய்கிழிய பேசுவார்கள் அவர்களுடைய சொந்த வாழ்விலே தோல்வியடைவார்கள்இ அல்லது மனமுடித்துக் கொள்ள மாட்டேன் எனும் பேர்வழிபோல் வேடம் போடுவார்கள் இ அந்தப் புறத்திலே யாருக்கும் தெரியாமல் சல்லாபிப்பார்கள் இ இது தான் இன்று நடந்து வருகிறதுஇ அன்றும் நடைமுறையில் இருந்து வந்தது .

தானும் வாழவேண்டும்இ தன்னைப் போல பிறரும் வாழவேண்டும் இறைவனால் மனித சமுதாயம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வேண்டும் எனும் நன்னோக்கில் விதவைகளுக்கும் தன்னைப் போல் தன் சமுதாயத்தவரும் வாழ்வளிக்க வேண்டும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்; எனும் அடிப்படையில் கைக்குழந்தைகளுடன் இருக்கும் விதவைக்கு மனக்கொடை வழங்கி வாழ்வுக்கரம் நீட்டிய அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய விதவை திருமணத்திலிருந்து மொத்த உலக சமுதாயமும் படிப்பினை பெறவேண்டும்இ அண்ணல் அவர்களுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் மனித சமுதாயத்திற்கு படிப்பினை உண்டு.

விதவைக்கும்இ ஏழைக்கும் உதவி செய்பவன் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தவனைப்போலாவான். அல்லது இரவில் வணங்கிஇ பகலில் நோன்பு நோற்றவனைப்போலாவான். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) அவர்கள் நூல்: புகாரி
மேற்கூறிய விதம் அண்ணல் அவர்கள் செய்து காட்டியதால் அவர்களுடைய அவ்வறிவிப்பு பொண்ணெழுத்துக்களில் பொறிக்கப்படுபவையாக உள்ளதுஇ மறுமையை நம்பி இறையச்சத்துடன் வாழும் முஸ்லிம்கள் இன்றும் அவ்வறிவிப்பின் படி விதவைக்கு வாழ்வளிப்பவர்களைக்கண்டு வருகிறோம்இ அண்ணல் அவர்களுடைய லட்சக் கணக்கான அறிவிப்புகளை இன்றும் எமது முஸ்லிம் சமுதாயம் பொண்மொழிகள் என்றே கூறுவர்இ காரணம் அவைகள் அனைத்தும் அவர்களது வாழ்வில் நடைமுறை படுத்தியவையாகவே இருக்கும் ஒன்று கூட அவர்களது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்காது
அல்லாஹ் நாடினால் மேலும் அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தில்


அன்னை ஆயிஷா (ரலி)...

அன்னை ஆயிஷா (ரலி)..
அண்ணலார் அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலும் அவர்கள் மரணித்து விட்டப் பிறகும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பது இந்த உலகம் அழியும் காலம் வரையிலும் வரலாற்றின் பொண்ணேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும்இ இன்னும் மிகச்சிறந்த இறையச்சம் உடையவரும்இ இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில்இ மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்தபோதுஇ அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும்இ இன்னும் தன்னுடைய உயிரை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிரை மதித்தவரும்இ இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தின்னைத் தோழரும் ஆவார்கள்.

ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களையும்இ அபுபக்கர் (ரலி) அவர்களையும் குறைஷிக் கூட்டம் முகம் நீலம் பூர்த்து விடுமளவுக்கு நையப் புடைத்துவிடுகிறது எந்தளவுக்கெனில் மண்டை உடைந்து இரத்தம் வடிந்து அது அபுபக்கர் (ரலி) அவர்களுடைய முகம் முழுவதையும் மாற்றி விடுகிறது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்று விட்டு விட்டு ஓடும் நிலை ஏற்பட்டு விடுகிறது இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் போதுஇ செய்தி அறிந்து அபுபக்கர் ( ரலி ) அவர்களுடைய தாயார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து தங்களது மகனை மட்டும் அழைத்துச் சென்று விடுகிறார்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு நினைவு வந்ததும் முதலில் அவர்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை அய்னா அஷ்ஹாபி எங்கே எனது தோழர் என்பதாகும் இதை செவியுற்ற அவர்களது தாயார் அவர்களின் மீது கோபம் கொள்கிறார்கள் ( அப்பொழுது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லை ) அவரால் தானே உனக்கு இந்த நிலை என்று கடிந்து கொள்கிறார்கள்.

ஒருமுறை கைபர் யுத்தத்திற்காக நிதி திரட்டும் பொழுது வீட்டில் இருந்த தங்க வெள்ளி நாணயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கைலியில் கட்டி மூட்டையாக சுமந்து கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள் வீட்டில் எதுவும் வைத்திருக்கிறீர்களா ? என்று அண்ணல் அவர்கள் கேட்டதற்கு அல்லாஹ்வையும்இ அவனுடைய தூதரையும் வைத்து விட்டு மீதி அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன் எனக் கூறினார்கள். உடல்இ பொருள்இ உயிர் அனைத்தையும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அர்ப்பானித்தவர்கள்இ முஹம்மது (ஸல்) அவர்களின் மீது உயிரையே வைத்திருந்தவர்கள்

அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை அண்ணல் அவர்களுக்கு திருமனம் செய்து வைத்த கவ்லா பின்த ஹக்கீம் என்ற நபித் தோழியர் அவர்களே அண்ணல் அவர்களுக்கு அன்னை ஆயிஷா (ரல்) அவர்களை திருமணம் செய்து வைக்க அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஒப்புதலை பெற்றுக் கொண்டு அண்ணல் அவர்களுடைய ஒப்புதலையும் பெற்றுக் கொண்டடு திருமண ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்து வைக்கிறார்கள்

அன்னையவர்கள் சிறுவயதையுடையவர்களாக இருந்ததால் திருமண ஒப்பந்தம் மட்டும் நடைபெறுகிறது.

அல்லாஹ் சுப்ஹான ஹூவத்தாலா அறிவு ஜீவியாகிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்ளை தனது தந்தையைப் போன்றே இறையச்சமுடையவர்களாகவும்இ இஸ்லாத்தில் உறுதியான பிடிப்பு ( ஈமான் ) கொண்டவர்களாக வார்த்தெடுத்து விடுகிறான்.

அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அன்றைய ஆட்சியாளர்களால் இஸ்லாத்திற்கு சிறு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்இ அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அன்னையவர்களிடத்தில் ஆலோசனை கேட்கக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

ஒரு முறை அலி (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்தில் உதுமான் (ரலி) அவர்களை கொலை செய்த கொலைகாரர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டும் கானாமல் இருந்ததற்காக அரசை எதிர்த்துப் போர் பிரகடனம் செய்தார்கள். பெண்களை திரட்டி அரசை எதிர்த்து ஊர்வலம் சென்றார்கள் .

இன்றும் இஸ்லாமிய பெண்களிடையே மார்க்கப்பற்றுடன் கூடிய சமுதாயப்பற்றும் வளர்ந்ததற்கு அன்னையவர்களுடைய இஸ்லாமிய சமுதாயபட பற்று மிகப் பெரும் முன் மாதிரியாகும்.

அண்ணல் அவர்கள் மரணித்தப் பின் அவர்களுடைய உபதேசங்களையும்இ அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் மக்களிடத்திலே பல்லாயிரக் கணக்கான அறிவிப்புகளாக அறிவிக்கக் கூடிய நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தனர்

அன்பிற்குரிய சகோதரர்களே !

மேற்கத்தியர்கள் கூறுவதுபோன்று அண்ணல் அவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அன்னையவர்களுக்கு அப்பொழுது 6 வயதே ஆகியிருந்தது தாம்பத்ய வாழ்க்கைக்காக இன்னும் வல வருடங்கள் காத்திருக்க வேண்டும்இ பல வருடங்கள் காத்திருந்து ஒரு கன்னிப்பெண்ணை அடைவதற்கு அன்றே வேறொருக் கன்னிப் பெண்ணை அடையக்கூடிய அனைத்து வழிகளும் மிக இலகுவாகவே இருந்தது என்று இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

மேலும் பல வருடங்கள் காத்திருந்து ஆயிஷா (ரலி) அவர்களை அடைவதற்குரிய சுதந்திர பூமியாக அது இருக்கவில்லை. மாறாக போர்மேகங்கள் சூழ்ந்த அபாயகரமான பூமியாகத் திகழ்ந்தது. அந்த மக்களுடைய வாழ்க்கை ஒவ்வொரு நாள் என்பதை விட அவர்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அபாயகரமானதாக இருந்தது என்றால் மிகையாகாது.

மக்காவிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் மதீனாவில் தங்களுக்கு ஓர் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குறைஷிகள் முழு மதீனாவையும் தாக்கி முஸ்லீம்களை அழித்து ஒழித்து விடுவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்இ மதீனாவில் முந்தைய வேதங்களை படித்து இறுதி நபி வருகைக்காகக் காத்திருந்த யூதர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மதீனா வருகைக்குப் பிறகு ஏராளமான யூதர்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். இதனால் சினங்கொண்ட கிருஸ்தவ ரோமஇ பாரசீக வல்லரசுகள் மதீனாவை தாக்கி தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்இ மதீனாவை சுற்றி நாலாப் புறங்களிலிருந்தும் மதீனாவுக்கு பேராபத்து காத்துக் கொண்டிருந்தது இவ்வாறான பேராபத்துகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களுடைய எதிர்கால சுகபோகமான வாழ்க்கைக்காக திட்டம் தீட்ட முடியுமா ? போர் கால அபாயம் சூழ்ந்த பூமியில் வாழ்பவர்கள் எதிர் கால சுகபோகத்தை செப்பனிட முடியமா ? என்பது தான் இங்கே கேள்விஇ இன்னும் சொல்வதாக இருந்தால் அவர்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கூட உணவை சேமித்து வைக்கக் கூடியவர்களாக இருந்ததில்லை. எவரிடத்திலாவது உணவு கூடுதலாக இருந்தால் அதை அக்கம் பக்கத்து வீட்டாரை அழைத்து வைத்து அப்பொழுதே முடித்து விடுவார்கள். அடுத்த நாளைக்கு எதுவும் இல்லை என்றால் பட்டினியாக கிடந்து விடுவார்கள் அல்லது நோன்பு என்று அறிவித்து விடுவார்கள். இந்த நிலையில் ஆறுஇ ஏழு வருடங்கள் கழிந்து மெச்சூர் ஆக இருக்கும் ஒருப் பெண்ணுக்காக இன்றே ஆசையை அடித்தளம் அமைக்க மடியுமா ? முடியாது !

ஆனால் இன்று சுகபோக வாழ்க்கை வாழும் மேற்கத்தியர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் என்னஇ என்ன வழிகளில் உடல் சுகத்தை அடையமுடியுமோ அவ்வழிகளிலெல்லாம் அடைந்து கொள்கின்றனர்இ அது அவர்களுக்கு முடிகிறது அதே போல் எதிர்காலத்தில் எவ்வாறு அடைந்து கொள்வது என்றும் திட்டம் தீட்டி அதன்படியும் அடைந்து கொள்கின்றனர்; காரணம் அவர்களுடைய நாட்டிற்கு அண்டை நாடுகள் மூலம் யாதொரு போராபத்தும் ஏற்படுவதில்லை அவர்களுடைய ஆட்சியாளர்கள் தங்களிடம் நேட்டோப் பவரையும் இ வீட்டோப் பவரையும் கையில் வைத்துக் கொண்டு தமது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதால் இவர்கள் சுகபோகமான எதிர்கால வாழ்வுக்கு சிறப்பான செப்பனிடுதல் சாத்தியமாகி விடுகிறது இ ஆனால் அன்றும் இன்றும் என்றும் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்;க கூடிய முஸ்லீம்கள் எதிர்கால வாழ்க்கையை செப்பனிட முடியாதவர்களாகவே ஆக்கப் பட்டிருந்தார்கள்இ இன்றும் உலகம் முழுவதும் இதே நிலை தான்.

இன்று உலகில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளை முஸ்லீம்கள் ஆட்சி செய்கிறார்கள் ( இஸ்லாம் ஆட்சி செய்ய வில்லை ) அவற்றில் ஒரு நாட்டையேனும் சுட்டிக்காட்டி இந்த நாடு அச்சுறுத்தலற்று இயங்குகிறது என்றுக் கூற முடியாத அளவுக்கு எல்லா இஸ்லாமிய நாடுகளும் மேற்கத்தியர்களின் நெருக்குதலில் வாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.

இது தான் முஸ்லிம்களுடைய அன்றையஇ இன்றைய வாழ்க்கையாக இருந்து வருகிறது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பான நிலையான வாழ்வு மறு உலகில் மட்டுமே அமையும் மறு உலகை நம்பிவாழும் முஸ்லீம்களுக்கு துனியா ஒரு அற்பமே !

அல்லாஹ் கூறுகிறான் : உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32.

அறிவுப் பூர்வமாக சிந்திப்பார்களேயானால் இத்திருமணம் அண்ணல் அவர்கள்இ அவர்களது அன்புத் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் தோழர் எனும் அந்தஸ்த்திலிருந்து இன்னும் நெருங்கிக் கொள்ள எண்ணியதை கருத்தில் கொண்டு அமைந்தவையேயாகும் இ மாறாக ஆறேழு வருடம் காத்திருந்து அடைந்து கொள்வோம் என்று திட்டம் தீட்டி பலருடைய போட்டிக்கிடையில் தனக்கு வேண்டுமென்று அமைத்துக் கொண்டதல்ல என்பதை மறுமை வாழ்வை நம்பாத உலக வாழ்வின் மீது மோகம் கொண்ட மேற்கத்தியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான் : நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ''வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்;இ அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும்இ (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும் அல்குர்ஆன் : 3:12



அன்னை ஹஃப்சா (ரலி)...

அன்னை ஹஃப்சா (ரலி)..
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மதீனாவில் நிருவப்பட்;ட இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது கலீஃபா ஆவார்கள். அவர்கள் ஒரு மாவீரரும் ஆவார்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தை வேறோடும் வேறடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து விடுவதற்காக திட்டம் தீட்;டி செயல்பட்டவர்களுடைய அணியில் இணைந்து இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்டார்கள் எந்தளவுக்கென்றால் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்து விடுமளவுக்கு செயல்பட்டார்கள். உறுவிய வாளுடன் அண்ணல் அவர்களை கொலை செய்து விடுவதற்காக சென்றவர்கள்இ உள்ளங்களைப் புரட்டக் கூடிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உமர் (ரலி) அவர்களுடைய உள்ளத்தைப் புரட்டி இஸ்லாத்தின் பால் ஈர்க்கச் செய்து விடுகிறான்.

இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டப்பின் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றியப் பணி அரும் பணிகளும்இ அவர்களுடைய தியாகங்களும் இஸ்லாத்திற்கு முன் அவர்களிடமிருந்த படாடோபம் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டப்பின் அதுவும் வல்லரசுகளை வீழ்த்தி நிலைகுலையச் செய்த மாவீரர் எனும் அந்தஸ்த்தில் இருக்கும் போது ஏழ்மை நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட விதம் மறுமையின் மீது அவர்கள் கொண்ட பற்றுதலை உலகுக்குப் பறைசாட்டிற்று.

ஒருமுறை வென்றெடுக்கப்பட்ட அலெக்சான்ட்ரியாக் கோட்டைக்கு ( எஜிப்துதுக்கு ) செல்கிறார்கள் அப்பொழுது எஜிப்துடைய ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கோட் அணிந்து மிடுக்குடன் காணப்பட்டைதக் கண்டு சினங்கொண்டு ரோட்டில் கிடந்த பொடிக் கற்களை எடுத்து அவர்களின் மீது வீச ஆரம்பித்து விடுகிறார்கள்.

அற்பஉலகின் மீது உமக்கு ஆசை ஏற்பட்டுவிட்டதா ?எங்கே உமது இடுப்பில் சொருவப்பட்டிருந்து போர் வாள் என்று கேட்கிறார்கள் ? கோட்டுக்குள் இருந்த போர்வாலைப் பார்த்தப் பின்னரே விடுகிறார்கள் அந்தளவுக்கு துனியாவின் மோத்தைத் துறந்து மறுமை வாழ்மை முன்னிருத்தி வாழ்ந்த நபித் தோழராவார்;கள்

அன்னை ஹஃப்சா (ரலி) அன்ஹா அவர்கள்.

உமர் (ரலி) அவர்களுடைய அன்பு மகள் ஹஃப்சா (ரலி) அவர்கள் ஹானீஸ் பின் ஹஸஃபா (ரலி) என்ற நபித்தோழருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தார்கள். அன்னையவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும்இ வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்னையவர்கள் மிகச்சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர்களாகவும் குர்ஆனை அழகிய தொணியில் ஓதக் கூடியவர்களாகவும் அவ்வப்பொழுது இறங்கக்கூடிய இறைவசனங்களை மனனமிடக் கூடியவர்களாகவும்இ இன்னும் அதன் விரிவுரைகளில் கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்இ குர்ஆனின் மீது அலாதியான ஈடுபாடு கொண்டிருந்தார்கள் உமர் (ரலி) அவர்கள் அன்னைகயவர்களை இளம் வயதிலேயே இறையச்சமிக்கப் பெண்மணியாக வார்த்தெடுத்தார்கள்.

பத்ரு யுத்தம் தொடங்குகிறது அதில் அன்னையவர்களுடைய கனவர் ஹானீஸ் (ரலி) அவர்கள் குதிரை ஏற்றம் அறிந்தவர்கள் பத்ரு யுத்தகளத்தில் மிகப்பெரும் சாகஸங்கள் செய்தார்கள் குறைஷிகளுடைய பலம்பொருந்தியப் படைகளுக்குள் சீறிப் பாய்ந்து சென்றுப் போரிட்டார்கள் பெரும் பெரும் தலைகள் உருளுவதற்கு காரணமாக இருந்தார்கள். அதனால் அதில் படுகாயம் அடைகிறார்கள் தனது கணவரின் வீர தீரச் செயல்களைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உளம் மகிழ்ந்தார்கள். காயம்பட்டிருந்த தனது கணவருக்குப் பணிவிடை செய்யும்பொழுது பத்ர் யுத்தத்தைப் பற்றி இறங்கியத் திருமறைவசனத்தை தனது கணவருக்கு அடிக்கடி ஓதிக் காண்பித்தார்கள் உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும்இ ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும்இ ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (8:10) சிகிச்சைப் பலணளிக்காமல் ஹானீஸ் (ரலி) அவர்கள் இறப்பெய்தி விடுகிறார்கள். இறந்த செய்தியைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக கவலை அடைந்தவர்களாகஇ அவர்களை ஜன்னத்துல் பக்கீயில் தானே முன்னின்று ஜனாஸா தொழுவித்து அடக்கம் செய்வதற்கு நிறைவேற்றினார்கள்.

தனது கணவரை இழந்த ஹஃப்ஸா (ரலி) அவர்கள்இ கவலை அடைந்திருந்தாலும் இறைவனின் வல்லமையை ஏற்றுக்கொண்டார்கள் அமைதி காத்தார்கள். முன்னைக்காட்டிலும் இபாதத்தில் தனது முழுநேரத்தையும் ஈடுபடுத்தினார்கள். இந்த சமயத்தில் தான் உதுமான் (ரலி) அவர்களின் மனைவியும்இ அண்ணல் அவர்களின் அன்பு மகளுமான ருக்கையா (ரலி) அவர்களும் மரணமடைந்திருந்தார்கள். எனவேஇ ருக்கையா (ரலி) அவர்களின் இடத்தை தனது மகளால் நிரப்பஇயலும்இ என்றெண்ணி உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகிஇ தனது மகளை மணந்து கொள்ளும்படி கோரினார்கள். உமர் அவர்களே..! இது பற்றி சிந்திப்பதற்கு எனக்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றது என்றுக் கூறிவிட்டார்கள் .

பிறகு அபுபக்கர் (ரலி)அவர்களிடம் சென்று திருமணம் செய்து கொள்ளும் படிக் கேட்கிறார்கள் அவர்களும் மறுத்துவிடவேஇ ( அல்லது பதில் எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார்கள்) மனம் உடைந்து விடுகிறார்கள் உமர் (ரலி) அவர்கள். அதன் பின் அண்ணல் அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறுகிறார்கள்.

உமரே..! நீங்கள் கவலைப்பட வேண்டாம். உதுமான் அவர்களை விடச்சிறந்த துணையை உங்களது மகளுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அதுபோல உங்களது மகளை விடச் சிறந்த துணையை அல்லாஹ் உதுமான் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பான் என்று கூறிவிடுகிறார்கள்.

சில நாட்கள் கழித்துஇ தனது மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை உதுமான் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அதற்கு மேல் எவரையும் அனுகாமல் இருந்து விடுகிறார்கள் இதன் பின்னரே அண்ணல் அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் அவர்களது மகளை திருமனம் செய்துகொள்ள தூது அனுப்புகிறார்கள் . இவர்களும் ஏறு;கனவே மனமுடித்து கணவனை இழந்த விதவையாகும்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
உமர் (ரலி) அவர்களுடைய சிந்தனை எதுவாக இருந்தது ? எப்படிப்பட்டதாக இருந்தது ? தனது மகளுக்கு இரண்டாம் தாரமாக மனமுடித்துக் கொடுப்பதற்காக துணையைத் தேடியது குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் தான் என்பதை கவனிக்க வேண்டும்இ குறிப்பிட்ட அந்த வட்டம் என்பது அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அபுபக்கர் (ரலி) அவர்கள்இ உதுமான் (ரலி) போன்றோர்களே என்பது குறிப்பிடத் தக்கது அந்த வட்டத்தில் மிஞ்சியது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மட்டுமேயாகும். அவர்கள் இருவரும் மறுத்துவிட்டதால் மனமுடைந்து விடுகிறார்கள் மேலும் ஒருவருடம் குறைவில்லாமல்; வேரு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விடுகிறார்கள் (ஹிஜ்ரி இரண்டாவது வருடத்தில் தான் பத்ரு யுத்தம் நடைபெறுகிறதுஇ அண்ணல் அவர்களுடன் ஹஃப்சா (ரலி) அவர்களுடைய திருமனம் ஹிஜ்ரி 3வது வருடம் நடைபெறுகிறது ) உமர் (ரலி) அவர்களுடைய எண்ணத்தையும் மனநிலையையும் கவனித்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தூது அனுப்புகிறார்கள்.

இங்கே முக்கியமாக கவனிக்கபப் பட வேண்டிய மற்றொரு விஷயம்

உமர்(ரலி)அவர்கள் இஸ்லாமிய வளர்ச்சிப் பணிகளுக்காக ஆற்றிய சேவைகள் சாதாரணமாக மதிப்பிடத்தக்கவைகள் அல்ல. அதேபோல் அவர்களுடைய இறப்பெய்தி கணவரும் பத்ருயுத்தகளத்தில் ஆற்றிய சாகசங்களும் சாதாரணமானவைகள் அல்ல இ
அன்னை அவர்களுடைய இறைநம்பிக்கையும்இ இறையச்சமும்இ சாதாரணமாக மதிப்பிடத்தக்கவைகள் அல்லஇ காரணம் சிறந்த நிர்வாகி உமர் (ரலி) அவர்களுடைய மகளாவார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களில் அன்னையவர்ளும் ஒருவர் என்பதாலும்இ இறைச்செய்திகளை எழுதி மனனம் செய்யும் அணியிலே அன்னையவர்கள் சிறப்பாக செயல்பட்டதாலும் அவர்களை தனது துணைவியாக அமைத்துக் கொள்வதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விருப்பம் கொண்டார்கள் மேலும் உமர் (ரலி) அவர்களுடைய எண்ணத்திற்கொப்ப அவர்களையும் தங்களுடன் நெருக்கமாக ஆக்கிக் கொள்ளவும் அண்ணல் அவர்களே ஹஃப்சா (ரலி) அவர்களை மனமுடித்துக்கொள்;கிறார்கள். இன்றளவும் அண்ணல்நபி (ஸல்) அவர்களுடைய மண்ணறைக்கருகில் உமர் (ரலி) அவர்களுடைய மண்ணறையும் இருந்து வருவதைக் கொண்டு அவர்களுடைய நெருக்கம் உலகவாழ்விலே எவ்வாறு இருந்தது என்பதை அறியலாம்.

அன்னை ஹஃப்சா (ரலி) அவர்களும் ஒரு விதவையாவார்கள்இ இத்திருமனம் உமர் (ரலி) அவர்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் அபுபக்கர் (ரலி) அவர்களுடன் நெருங்கிக் கொண்டது போல் உமர் (ரலி) அவர்களுடன் நெருங்கிக் கொள்வதற்கான முயற்சியே இத்திருமனத்தின் அடிப்படை விஷயமாகும்.



அன்னை ஸைனப் (ரலி)...

அன்னை ஸைனப் பின்த் ஹூஸைமா (ரலி) அன்ஹா அவர்கள்.
இஸ்லாம் முளைவிடத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் மக்காவில் இறை நிராகரிப்பாளர்களால் தொடுக்கப்பட்ட எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து இஸ்லாத்தில் இணைந்து கொண்ட முதன்மையானவர்களின் அணியில் அன்னையவர்களும் ஒருவராவார்கள்;.

மேலும் அன்னையவர்கள் அன்றே தர்ம சிந்தனையுடைவர்களாகத் திகழ்ந்தார்கள்இ இஸ்லாத்திற்குள் நுழைந்தப் பிறகு வாரி வழங்குவதில் இன்னும் அதிகமதிகமாக ஈடுபட்டார்கள் அண்ணையவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களுக்கு மனமுடித்துக் கொடுக்கப்பட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதர்க்கப்படுகிறார்கள் அதனால் அன்னையவர்கள் விதவையாகி விடுகிறார்கள்.

வரலாற்றுப்பிரசித்திப் பெற்ற உஹது யுத்தத்தில் ஏராளமான இறைவிசுவாசிகள் ( நபித்தோழர்கள் ) கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்இ அதனால் ஏராளமான இறைவிசுவாசப் பெண்கள் விதவையானார்கள். பலதாரமனம் மட்டும் அன்று நடைமுறையில் இருந்திருக்காவிடில் இறைவிசுவாச இளம் விதவைகளுடைய நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்திருக்கும் .

அன்றைய காலத்தில் போர்க்களங்களில் ஷஹீதாக்கப்படுகின்ற போர் வீரர்களுடைய மனைவிமார்களை எஞ்சியிருக்கும் நபித்தொழர்கள்இ போர்வீரர்கள் மனமுடித்துக் கொள்வது வழமையாக இருந்து வந்தது அதனடிப்படையில் அண்ணலார் அவர்கள் உஹது யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களுடைய அன்பு மனைவியும் ஆரம்பகால இறைவிசுவாசியுமாகிய அன்னை ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.

உஹத் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் போர் வீரர்களின் மனைவிமார்கள் ஏராளமானபேர் விதவையாகி தத்தளிக்கின்றனர். எனக்கு எற்கனவே மனைவிகள் இருக்கின்றுனர் அதனால் உங்களில் உள்ள மறறவர்கள் மனமுடித்துக் கொள்ளுங்கள் என்று அண்ணல் அவர்கள் ஒதுங்கி இருந்தால் அங்குள்ள மற்றவர்களின் முடிவும் அவ்வாறானதாகவே இருந்திருக்கும் அவர்களும் அதே பதிலையே திருப்பிக் கூறினால் அதை அவர்களால் எதிர்க்க முடியாது. விதவை மறுமனச்சட்டம் பெரும்பாலும் புறக்கனிக்கப்படும் அல்லது விதவையை மணமுடிப்பதில் இன்றிருப்பது போல் உள்நோக்கம் ( பொருளாதாரத்தை முன்னிட்டு ) ஏற்பட்டால் இஸ்லாமிய வளர்ச்சிக்காக உயிர் நீத்த தியாகிகளின் மனைவிகள் கேள்விக் குறியாக்கப் பட்டுவிடுவார்கள் அதனால் அவ்விடத்தில் அண்ணல் அவர்கள் ஒரு விதவையை தங்களுக்கு தேர்வு செய்கிறார்கள்.

போர்வீரர்கள் என்பவர்கள் அதிகபட்சம் இiளைஞர்களாகவே இருப்பர். அவர்களுடைய மனைவிகளும்; அதிகபட்சம் இளம்பெண்களாகவே இருப்பர். இவ்வாறு ஷஹீதாக்கப் படுபவர்களுடைய மனைவிகளாகிய இளம் விதவைகளை மனமுடிப்பவரும் அதிக பட்சம் அவர்களும் ஏற்கனவே திருமனமாகி மனைவி பிள்ளைகளுடன் இருப்பவர்களேயாவார்கள். இதில் நபிகள் நாயகம் மட்டும் விதிவிலக்கல்ல நபிகள் நாயகத்திற்கு இருந்தது போலவே அன்று பலருக்கும் அதிக மனைவியர் இருக்கவேச் செய்தனர் அதன் பிண்ணனி நாம் பெரும்பாலும் மேலே சுட்டிக்காட்டியது தான்.

நம்மை மணமுடிப்பவர் ஏற்கனவே மணமானவர் நமக்கு முறையான வாழ்க்கை வசதிகளை செய்து தருவாரா ? என்ற சிந்தனை மறுமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கும் விதவைக்கும் தோன்றாதுஇ நாம் உடல் ரீதியாக எந்தக் குறைவுமில்லாமல் இருக்கையில் இவர் இன்னொருத்தியை மணப்பதா ? என்று முந்தைய மனைவிக்கும்; தோன்றாதுஇ நம்மைப்போன்று அவர்களும் வாழப்பிறந்தவர்களே எனும் நன்னோக்கில் பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் முந்தைய மனைவிகள் தாராளமாக விட்டுக் கொடுப்பதுடன் அவர்களுடன் மிகவும் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்ட வரலாறு நம்மிடத்தில் உண்டு அதற்கு முக்கியக் காரணம் நபிகளாருடைய நேரடிப் பாசறையில் வார்க்கப் பட்ட அந்த சமுதாயம் உலக வாழ்க்கையை துச்சமெனக் கருதியதேயாகும்.

கனவனை இழந்த விதவைகள் உடல் ரீதியான இயற்கை தேவையை பரஸ்பரம் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக தவறான வழியை தேர்ந்தெடுத்து வழி தவறிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு வழங்கிய மாபெரும் அருட்கொடையே மறுமணமாகும்.

மேற்கத்தியர்கள் போன்று அன்று அவர்கள் அச்சமற்ற வாழ்க்கை வர்ழவில்லை எந்நேரம் எந்தப் பகுதியிலிருந்து படை திரட்டி வருவார்கள் எப்பொழுது போர் மூளும் அதில் எத்தனை வீரர்கள் கொல்லப்படுவார்கள் எத்தனை இளம் பெண்கள் விதவையாக்கப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது அதனால் தான் விதவையாக்கப் பட்டவர்களை எஞ்சியிருக்கும் நபியவர்களும் நபித் தோழர்களும் மனமுடித்துக்கொண்டு அதைப்பின்னுள்ள தங்களது வழித் தோன்றல்களுக்கும் ஆர்வமூட்டினார்கள்.

எந்த ஒரு சட்டம் ( அல்லது விரும்பத் தக்க நற்செயல்கள் ) நடைமுறைப் படுத்தப் படுவதாக இருந்தால் அதை அண்ணலார் முதலில் தங்களது வாழ்வில் நடைமுறைப் படுத்தி அச்செயலுக்கு உயிர் ஊட்டுவர்ர்கள் அதற்கடுத்து தங்களது குடும்பத்தார்கள் அதற்கடுத்து தங்களது தோழர்கள் என்றுத் தொடங்குவார்கள்.

அவ்வாறு ஒவ்வொருக் கட்டத்திலும் தங்களுக்கு மறு மனைவியாக தேர்வு செய்யப் படுபவர்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்காக அவர்களது பங்களிப்பென்ன ? தியர்கமென்ன ? என்பதைப்பார்த்து தேர்வு செய்வார்கள்இ அதனடிப்படையிலே அன்னை ஸைனப் (ரலி) அவர்களுடைய தர்ம சிந்தனையையும்இ ஆரம்பகால எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து இஸ்லர்த்தை ஏற்றுக் கெர்ண்ட தியாக சிந்தனையையும் கருத்தில் கொண்டு அண்ணல் அவர்கள் அன்னை ஸைனப் (ரலி) அவர்களை தேர்வு செய்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய தூய சிந்தனையின் அடிப்படையில் அல்லாஹ்வும் நபிகளாரின் மனைவிகளாகிய நமது அண்ணையர்களை நோக்கி திருமறை வசனத்தை கீழ்கானுமாறு இறக்கி எச்சரிக்கிறான்.

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால்இ (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோஇ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். அல்குர்ஆன் 33:32.

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும்இ அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கிஇ உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் 33:33.

மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். அல்குர்ஆன் 33:34

நம்முடைய அண்ணையர்களாகிய நபிகள் நாயகத்துடைய மனைவிமார்களை எச்சரித்து மேற்கானும் வசனங்கள் இறங்கினாலும் அவ்வசணங்கள் ஒழுக்கமுள்ள முழு இஸ்லாமியப் பெண்களையும் சார்ந்தே நிற்கும். அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மிகக் குறைந்த காலமே வாழ்ந்தார்கள் சுமார் எட்டு மாதங்கள் என்று கணிக்கப்படுகிறது. அண்ணையவர்கள் மரணித்து விடுகிறர்ர்கள். அண்ணல் அவர்கள் ஜனாஸாத் தொழுவித்து அண்ணையவர்களை ஜன்னத்துல் பக்கீயில் அடக்கம் செய்கிறார்கள்.


அன்னை உம்மு ஸலமா (ரலி)...

அன்னை உம்மு ஸலமா (ரலியல்லாஹூ அன்ஹா ) அவர்கள்

அன்னையவர்களது இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யாஇ உம்முஸலமா என்பது சிறப்புபு; பெயராகும் அன்னையவர்கள் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸத் மக்சூமி என்ற நபித் தோழருக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டிருந்தார்கள். அப்துல் அஸத் (ரலி) அவர்கள் அண்ணல் அவர்களின் மாமி மகனாவார்கள். அன்னையவர்கள் படித்தவர்களாவார்கள்இ கற்றக் கல்விக்கொப்ப ஒழுகி நடப்பவர்களாக இருந்தார்கள். மார்க்கத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்இ இஸ்லாம் தனது ஒளிக்கதிர்களை அரபுலகில் சுடர் விடச்செய்த ஆரம்ப காலத்தில் அன்னையவர்கள் அவ்வொளியை தனது உள்ளத்தில் பாய்ச்சிச்சிக் கொண்டார்கள். அன்னையவர்களின் தந்தையார் உமைய்யா பின் அப்துல்லாஹ் அவர்கள் அரபுலகில் மிகவும் மதிப்புமிக்கவர்களாக திகழ்ந்தார்கள் தர்மசிந்தனையுடையவர்களாகவும்இ பொதுநலச் சேவைகளில் அதிக ஈடுபாடு உடையவர்களாகவும் திகழ்நதார்கள். அவ்ரகளது நற்குணம் அன்னையவர்களுக்கும் இயல்பிலேயே அமைந்து விட்டது.

அன்னையவர்களின் நற்குணங்களினால் ஈர்க்கப் பட்ட மக்சூம் குடும்பத்தவர்கள் அன்னையவர்கள் மீது அதிகம் மரியாதை செலுத்தி வந்தனர். அபூஸலமா தம்பதியினர் இஸ்லாத்தை எற்றுக் கொண்டு அதன்படி ஒழகி தான தர்மங்களில பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் கொதிப்படைந்த குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்களில் வலீத் பின் முகீராவின் கடும் தொந்தரவுகளுக்கு ஆளாகி நிம்மதி இழந்து வாழ்வா ? சாவா ? எனும் நிலைக்கு அன்னையவர்கள் தள்ளப் பட்டார்கள். குறைஷிகளின் கடும் சிதரவதைகளுக்கு உள்ளாகிப்போன முஸ்லிம்கள் மக்காவிலிருந்து அபிசீனியாவுக்கு இடம் பெயர்ந்து செல்ல அண்ணல் அவர்கள் உத்தரவிட்டார்கள் அக் குழுவில் அன்னையவர்களது தம்பதியரும் அடங்குவர் அன்னையவர்கள் அபிசீனியாவில் இருக்கும் போதே மூன்று குழந்தைகளுக்கு தாயானார்கள்.

மக்காவில் உமர்(ரலி)அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட n;சய்தி அபிசீனியாவை சென்றடைந்தது அத்துடன் இன்னுமொரு செய்தியும் கூடவே சென்றது உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவியதால் மக்காவில் குறைஷிகள் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிருத்திக் கொண்டார்கள் மக்காவில் அமைதி தழுவுகிறது என்ற செய்தியாகும்.
இச்செய்தியறிந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மீண்டும் மக்காவிற்கு திரும்பி விடுகிறார்கள் மக்காவிற்கு வந்துப் பார்த்தால் கேள்விப் பட்டதுக்கு மாற்றமாக நிலமை மிகவும் தலைகிழாகவே இருந்தது

அபிசீனியாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பி வந்த ஹிஜ்ரத் வாசிகள் கொஞ்ச காலம் மக்காவில் தங்கிவிட்டு மீண்டும் அபிசினியாவிற்கே சென்று விடுவதெனும் முடிவுக்கு வருகின்றனர்; அதற்கு சிறிது நாட்கள் முன்புதான் அண்ணலார் அவர்களுக்கு மதீனா வரச்சொல்லி மதீனாவிலிருந்து தூதுக்குழு வந்திருந்தது அதனால் அண்ணலார் அவர்கள் அபிசீனியாவிலிருந்து திரும்பி வந்திருந்தவர்களை மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்ய உத்தரவிட்டார்கள்

அண்ணலார் அவர்களது உத்தரவுப் பிரகாரம் மதீனா செல்வதென முடிவெடுத்தார்கள் அதன்படி அன்னையவர்களும் அவர்களது கணவரும் புறப்பட ஆயத்தமானார்கள் இது செய்தியறிந்து அன்னையவர்களது குடும்பத்தார்கள் தங்கள் மகளை மீண்டும் பிரிவதற்கு மனமில்லாமல் அபூஸலமா (ரலி) அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களது மகளை தடுத்து நிருத்தி விடுகிறார்கள் அன்னையவர்கள் எவ்வளவோப் போராடியும் பலன் கிடைக்காமல் அவர்களுக்குள் பிரிவு உறுதியாகி விடுகிறது மேலும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அபூஸலமா (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப் படுகிறது.

கணவரையும்இ கைக்குழந்தைகளையும் பிரிந்து வெறிச்சோடிக் கிடந்த தான் வாழ்ந்த வீட்டைப் பார்த்து தினந்தோறும் அன்னையவர்கள் அழுது புலம்புபவர்களாக இருந்தார்கள் ஒருநாள் அவ்வாறு அழுது கொண்டிருக்கும் போது அன்னையவர்களது உறவினர் ஒருவர் அன்னையவர்களது நிலையைக் கண்டு மனம் உடைந்து அன்னையவர்களது குடும்பத்தார்களிடம் சமாதானம் செய்து விட்டு மதீனா சென்று அபூஸலமா (ரலி) அவர்களிடம் அன்னையவர்களது நிலையை எடுத்துக்கூறி குழந்தைகளை கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள் குழந்தைகள் திரும்பக்கிடைத்த சந்தோஷத்தில் அன்னையவர்கள் உற்சாகமாகிறார்கள் எப்படியாவது தனது கனவரையும் அடைந்து விடவேண்டும் என்று முடிவுக்கு வந்து தங்களது குடும்பத்தார்களிடம் போராடி மதீனா செல்ல அனுமதி பெற்று விடுகிறார்கள் ஆனால் அன்னையவர்களை அழைத்துக் கொண்டுப் போய் மதீனாவில் சேர்க்கும் பொறுப்பை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை அதனால் தனது குழந்தைகளுடன் தாமேத் தனியாக பயணிப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள் குழந்தைகளுடனும்இ தேவையான உணவுகளுடனும் ஒட்டகத்தில் அமர்ந்து அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து மதீனாவை நோக்கி அன்னையவர்கள் பயணிக்கிறார்கள்.

அன்னையவர்களது உறுதியான உள்ளத்தை அறிந்து கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னையவர்களுக்கு உதவ முன்வருகிறான்

பயணத்திலிருந்து மக்கா திரும்பி வந்துக் கொண்டிருந்த உதுமான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் அன்னையவர்கள் தனித்துப் பயணித்துக் கொண்டிருந்ததைக் கவனித்து விடுகிறார்கள் அன்னையவர்களை நெருங்கி தனித்து பயனித்துக் கொண்டிருப்பது பற்றிக் கேட்கிறார்கள். அன்னையவர்கள் விபரம் கூறவே தான் துணைக்கு வருவதாக அனுமதி பெற்று அன்னையவர்களை மதினாவில் விட்டுத் திரும்புகிறார்கள்.

தனது மனைவியும் குழந்தைகளும் திரும்ப கிடைக்கப் பெற்றதில் அபூஸலமா (ரலி) அவர்களுக்கு அதிக சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திற்று
ஏற்கனவே உஹத் யுத்தத்தில் அபூஸலமா (ரலி) அவர்களுக்கு கையில் பலத்தக் காயம் ஏற்பட்டு அது பெரும் புண்ணாக மாறி இருந்தது புண் ஆறிக்கொண்டு வரும் வேளையில் அஸத் கோத்திரத்தாருடனான யுத்தம் தயாராகி விட்டது அதில் அபூஸலமா (ரலி) அவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர் படைத் தளபதியர்க தேர்வு செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

உஹதில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்களுக்குப் பிறகு அரபுலகின் பார்வை அஸத் கோத்திரத்துடன் முஸ்லிம்களுடனான யுத்தமாகும். அதனால் அந்த யுத்தத்திற்கு மாவீரராகிய அபூஸலமா (ரலி) அவர்களை காயம் ஆறாத கையிலே கொடி ஏந்தி போர்க்களத்திற்கு அனுப்புகிறார்கள் ஒரு கையில் கொடியும் மற்றொரு கையில் வாளுமாக எதிரிப் படைகளுக்குள் புகுந்து சுழன்று வெற்றி வாகை சூடுகிறார்கள். பட்ட இ;டத்தில் படும் என்றுக் கூவதுது போல் காயம் பட்ட அதே கையில் மேலும் ஒரு வாள் வெட்டுப் படுகிறது அதனால் காயம் மேலும் பெரிதாகி விடுகிறது.

காயம் அதிக ரணத்தை ஏற்படுத்துகிறது இன்று போல் அன்று நவீன சிகிச்சைகளும்இ நவீன மருத்துவக் கருவிகளும் கண்டுப் பிடிக்காத காலகட்டம் என்பதால் நாட்டு ( மருந்து ) சிகிச்சை பலணலிக்க வில்லை அபூஸலமா (ரலி) அவர்களுடைய நிலை கவலைக்கிடமாகிறது படுத்தப் படுக்கையாகிறார்கள். செய்தியறிந்த அண்;ணல் அவர்கள் அபூஸலமா (ரலி) அவர்களை சந்திக்கச் செல்கிறர்hள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண் எதிரே அபூஸலமா (ரலி) அவர்களுடைய ரூஹ் பிரிகிறது அவர்களது கண்களை கசக்கி விட்டு அண்ணல் அவர்கள் முன்னின்று ஜனாஸாத் தொழுவித்து நல்லடக்கம் செய்கிறார்கள் அல்லாஹ் கூறுகிறான் (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம்இ ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்'' என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;. அல்குர்ஆன் 2:46.

மூன்று குழந்தைகளும் தாயுமாக அன்னையவர்கள் விதவையாகி விடுகிறார்கள். அன்னையவர்கள் மதீனாவில் இருக்கிற தனது கணவரை அடைந்து கொள்ள வேண்டி தனது குடும்பத்தாரை பகைத்துக் கொண்டு தன்னந்தனியே மதீனா புறப்பட்டு வந்தவர்கள் அதனால் மீண்டும் மதீனா சென்று அவர்களது தயவில் வாழ விரும்பாத அன்னையவர்கள் மதினாவில் தங்கி விடுவதென முடிவு செய்கிறார்கள்.

அன்னயவர்ளுடைய தியாகச்செயலை கருத்தில் கொண்டும்இ அன்னையவர்களுடைய பாதுகாப்பற்ற நிலையை கருத்தில் கொண்டும் அன்னையவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எனும் முடிவுக்கு முதலில் அபூபக்கர் (ரலி) அவரi;கள் முடிவுக்கு வருகிறார்கள் அதன் படி அன்னையவர்ளை மனமுடித்துக் கொள்வதாக தூது அனுப்புகிறார்கள். அன்னையவர்கள் மறுக்கவேஇ அதற்கடுத்து உமர் (ரலி) அவர்கள் தூது விடுகிறார்கள் அதற்கும் அன்னையவர்கள் மறுத்து விடுகிறார்கள். இறுதியாகவே அன்னல் அவர்கள் தூது விடுகிறார்கள் அதற்கு அன்னல் அவர்களிடம் எனக்கு நிறையப் பிள்ளைகள் இருக்கிறார்கள் இ எனக்கும் வயதாகி வி;ட்டது என்றுகச் கூறுகிறார்கள் அதற்கு அன்னல் அவர்கள் எனக்கும் வயதாகி விட்டது இ ஆனாலும் உங்களுடைய பாதுகாப்புக் கருதியே இக்கோரிக்கை வைக்கப்படுகிறது என்றுக் கூறுகிறார்கள் கனவனை இழந்த ஒருப் பெண்ணால் தனது குழந்தைகளுடன் மட்டும் தனிதது வாழவேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கு குறைந்தபட்சம் அப்பெண்ணுடைய பெற்றோர்களுடைய பாதுகாப்பாவது இருக்க வேண்டும் அதுவுமில்லாமால் தனித்து வாழ்வது என்பது கடினமான முடிவாகும். அதனால் அன்னையவர்கள் சம்மதிக்கிறார்கள்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய திருமனங்களிலே அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களுடன் நடந்த இந்த திருமணமும் தியாகத்தின் அடிப்படையில் அமைந்தது தான் என்பதை அன்னையவர்கள் இஸ்லாமிய ஆரம்பகால கட்டத்தில் இஸ்லாத்தை ஏறு;றுக் கொண்டு அதன் பிறகு அவர்கள் அடைந்த துன்பங்கள் துயரங்களை மேற்கானும் சம்பவங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் . அதனடிப்படையிலேயே அண்ணலாவர்கள் மணமுடிக்க இணங்குகிறார்கள். அல்லாஹ் நாடினால் இனிவரும் காலங்களில் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தில் அமைந்த மற்ற திருமணங்களையும் பார்க்கலாம்

அல்லாஹ் கூறுகிறான் : உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால்இ அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம்இ ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும்இ உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும்இ அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. 3:140.


அன்னை ஸைனப் ஜஹ்ஸ்(ரலி)

அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள்
அன்னையவர்கள் மக்கா நகரில் மதிப்புமிக்க ஹாஷிம் கோத்திரத்தில் பிறந்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தந்தை வழி உறவான மாமி மகளாவார்கள்.

அமைதி மார்க்கம் ( இஸ்லாம் ) மக்காவில் தவழத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அன்னையவர்களது சகோதரர் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களது அழைப்பின் பேரில் அன்னையவர்கள் அதை அணைத்துக் கொண்டார்கள்.

அன்னையவர்கள் தர்ம சிந்தனையுடையவர்களாக திகழ்ந்தார்கள் இ சிறுப் பிராயத்திலேயே தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள் அதனால் அண்ணல் அவர்கள் அன்னையவர்களுக்கு நீண்ட கரங்களை உடையவர் என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கினார்கள் அன்னையவர்கள் 53வது வயதில் இறப்பபெய்தும் போது அவர்களது இல்லத்தை மதீனாவின் ஏராளமான ஏழைகள் சூழ்ந்து கொண்டு அழுததாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.மேலும் அன்னையவர்கள் அதிக நாணமுடையவர்களாகவும்இ வணக்க வழிபாடுகளில் அதிகம் கவணம் செலுத்தக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

அன்னையவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலகட்டத்தில் அன்னையவர்களுடைய தந்தை வழித் தோன்றல்களான ஜஹ்ஸ் குடும்பத்தாரில் ஏராளமான பேர் இஸ்லாத்தை தழுவியிருந்தனர்இ குறைஷிகளுடைய தாக்குதலுக்கு ஆளாகி நாடு துறக்கும் முஸ்லிம்களின் முதல்குழுவில் 'ஜஹ்ஸ்' குடும்பத்தார்களும் இடம் பெற்றிருந்தனர். எந்தளவுக்கென்றால் 'ஜஹ்ஸ்' குடும்பத்தார்களுடைய காலி செய்யப்பட்ட வீடுகள் மக்காவில் ஏராளமாக பூட்டப் பட்டுக்கிடந்தன அவ்வாறு பூட்டப்பட்டு ஆள் அறவமற்றுக் கிடந்த பல வீடுகளை குறைஷிகள் ஆக்ரமித்துக் கொண்டதாக வரலாறுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஜஹ்ஸ் குடும்பத்தார்கள் அபிசீனியாவிலிருந்து திரும்பி மக்கா வந்ததும் தாங்கள் விட்டுச் சென்ற வீடுகளை குறைஷிகள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு திகிலுற்றார்கள் தங்களது வீடுகளை திரும்பக் கேட்டதற்கு திருப்பித் தர மறுத்து விட்டனர். ஜஹ்ஸ் குடும்பத்தார்கள் அண்ணலாரிடம் முறையிட்டபொழுது அண்ணலார் கூறினார்கள் நீதியாளன் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுங்கள் அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் இதை விட நல்லதொரு வீட்டை அமைத்துத் தருவான் என்று ஆறுதல் கூறினார்கள் மேலும் அவர்களை மீண்டும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் படியும் கோரினார்கள் அண்ணல் அவர்களின் உத்தரவுப் பிரகாரம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொன்டார்கள்.

சிறிது நாட்களில் அண்ணல் அவர்களும் மதீனா வந்து விடுகிறார்கள்இ மதீனா வந்ததும் அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்கும் அண்ணல் அவர்களுடைய வளர்ப்பு மகனான ஸைத் பின் ஹாரிதா (ரலி) அவர்களுக்கும் மணமுடித்து கொடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்கிறார்கள். அண்ணல் அவர்கள் எந்த ஒரு சமூக சீர்திருத்தத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் தங்களையும் தங்களது குடும்பத்தாரையுமே முன்னிருத்துவார்கள்இ

மனித இனத்தில் உயர்ந்தவர்இ தாழ்ந்தவர் எனும் குலப்பெருமையயும்இ வெள்ளையர் கருப்பர் எனும் நிறவெறியையும்இ ஆண்டான் அடிமை எனும் ஆதிக்க வெறியையும் முடிவுக்குக் கொண்டு வந்து மனித இனத்தை சமநிலைப் படுத்துவதற்கு எண்ணிய அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் உயர்ந்த குலத்து பாரம்பரியமிக்க குடும்பத்து அழகு நங்கையாகிய அன்னை ஜைனப் (ரலி) அவர்களையும்இ ஓர் சாதாரண குடும்பத்தில் பிறந்து அண்ணல் அவர்களிடம் அடிமையாக வளர்ந்த ஸைத் (ரலி) அவர்களுக்கும் திருமணம் செய்ய முன்வருகிறார்கள். ( பிறகு அவர்களை விடுதலை செய்து அவர்களை வளர்க்கும் பொறுப்பையும் அண்ணல் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் )

அண்;ணல் அவர்களுடைய திட்டத்தை அறிந்;து அவர்களுடைய குடும்பத்தில் நெருக்கமான உறவுக் காரராகிய அன்னையவர்கள் தன்னை அர்ப்பணிக்க முன் வருகிறார்கள்இ தடுக்க முன்வரவில்லை காரணம் அண்ணல் அவர்கள் ஒரு விஷயத்தில் முடிவு செய்தால் அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததுடன் அண்ணல் அவர்கள் எடுத்த ஒரு முடிவின் பால் மாற்றுக் கருத்துக் கூற அன்று எவரும் முன்வர மாட்டார்கள் காரணம் இறைவசனம் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்இ அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவேஇ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். அல்குர்ஆன் (33:36) அண்ணல் அவர்களுக்கு இறங்கிய அல்லாஹ்வின் திருமறை வசனத்தை அறிந்திருந்த அன்னையவர்கள் அண்ணல் அவர்களுடைய முடிவை எதிர்க்க மனம் வரவில்லை அதனால் மௌனம் காக்கிறார்கள். திருமணமும் நடந்தேறுகிறது திருமனத்திற்குப்பின் இருவருக்குமிடையில் ஒத்தக்கருத்து ஏற்படவில்லை மனக்கசப்புத் தான் நீடிக்கிறது மார்க்க அடிப்படையில் எல்லா விஷயத்ங்களிலும் குணத்தின் குன்றாக திகழ்ந்த அன்னையவர்கள் ஸைத் (ரலி) அவர்களுடைய விஷயத்தில் மட்டும் குலப்பெருமையை விட்டுக்கொடுக்க (சகித்துக் கொள்ள) மனம் இடம் கொடுக்கவில்லை.

கணவன் என்ற அந்தஸ்தும்இ மரியாதையும் அறவே கிடைக்காததால் ஸைத் (ரலி) அவர்கள் மனம் உடைகிறார்கள்இ பல வேளைகளில் அண்ணல் அவர்களே அவர்கள் இருவருக்கும் மத்தியில் மத்தியஸ்தம் செய்து வைப்பவர்களாக இருந்தார்கள் பலனில்லை. நிலைமை தீவிரமடைந்ததும் தனக்கும் நிம்மதி இல்லைஇ தனது மனைவிக்கும் நிம்மதி இல்லை என்பதை உணர்ந்த ஸைத் (ரலி) அவர்கள் விவாகரத்து செய்து விடுகிறார்கள். நெருக்கடியான நிலைக்கு அண்ணல் அவர்கள் தள்ளப்படுகிறார்கள் அண்ணல் அவர்களுடைய உள்ளத்தையும்இ செயல்பாட்டையும் நன்கு அறி;ந்திருந்த அ;ல்லாஹ் சுபஹானஹூவத்தாலா இந்தப் பிரச்சனையை ஒழுங்குபடுத்தி இதன் மூலம் மேலும் சமூகத்தில் நிலவி வந்த ஒரு போலித் தனத்தையும் முடிவு கட்ட நாடுகிறான்

அன்றைய காலகட்டத்தில் அரபுலகில் மட்டுமல்லாது உலகில் பெறுவாரியான மக்களிடத்தில் வளர்ப்பு மகனை இரத்த உறவாக கருதப்பட்டு வந்தது இரத்த உறவாக மட்டும் தான் கருதுவார்கள் வாரிசு உறவாக கருத மாட்டார்கள் வாரிசுரிமை அவர்களுக்கு கிடைக்காது. அதனால் இந்த வளர்ப்பு மகன் என்பதும் ஏறத்தாழ அடிமைகளை நடத்துவதுப் போன்றே இருந்தது பெயர் மட்டும் மாறி இருந்தது பழக்கம் ஒன்றாகவே இருந்தது. மக்களிடத்தில் புளங்கி வந்த இந்த போலித்தனத்தை உடைத்தெறிவதற்கு அல்லாஹ்வே இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அண்ணலார் அவர்களுடைய வளர்ப்பு மகனாகிய ஸைத் (ரலி) அவர்கள் விவாகரத்து செய்த ஸைனப் (ரலி) அவர்களை அண்ணலாருக்கே வஹியின் மூலம் திருமனத்தை நடத்தி வைக்கிறான் (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்துஇ நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோஇ அவரிடத்தில் நீர்; ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைதுதுக் கொள்ளும்'' என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததைஇ மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைதுதிருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான்இ நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்விக்கிறோம். ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள்இ தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால்இ அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37) தனது வஹீயை சாட்சியாக்கி அண்ணல் அவர்களையே மனமுடிக்கச் செய்து மக்களிடம் புளங்கி வந்தப் போலியான உறவை ( ஏமாற்றுத் தனத்தை ) முடிவு செய்தான்.

அன்பிற்கினிவர்களே !
இத்திருமனத்தின் மூலம் சமுதாயத்தில் மிகப்பெரும் இரு சீர்திருத்தங்கள் ஏற்பட்டது ஒன்று குலப்பெருமையை அல்லாஹ்வின் தூதரவர்கள் உடைத்தெறிந்தார்கள் ( அந்தக் குறிப்பிட்ட ஒரு ஜோடிக்கு கருத்தொற்றுமை இல்லாமல் இருந்திருக்கலாம்இ ஆனால் திட்டம் மகத்தான வெற்றியடைந்து அன்றைய அரபு தீபகற்பம் முழுவதும் சாஸ்திரம்இ சம்பிரதாயம் பார்த்து குல ஒற்றுமைஇ இன ஒற்றுமைப் பார்த்து நடத்தப் பட்ட திருமனங்களுக்கு இத் திருமனம் மூலம் சாவு மணி அடிக்கப்பட்டது )

மற்றொன்று ( வளர்ப்பு ) மகன் எனும் போலித்தனத்தைஇ ஏமாற்றுத் தனத்தை அண்ணலார் அவர்களால் வளர்க்கப்பட்ட மகனுடைய விவாரத்து செய்யப்பட்ட மனைவியை அண்ணலாரைக் கொண்டே மணமுடிக்கச் செய்து அதை உலகலவில் (இன்று வரை) பேசச்செய்து தத்தெடுத்து வளர்க்கப்படுபவர்கள்இ வளர்க்கப்படுபவர்களுடைய மகனாக மாட்டார்கள் பெற்றவர் ஒருவர் இருக்க மற்றவர் தந்தையாகிட முடியாது எனும் செய்தியை உலகுக்கு சொல்லி உணர்த்தினான்.

ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும் - பொய்மை அறவே இருக்கக் கூடாது என்று இஸ்லாம் விரும்புகிறது அதனால் யார் யாருக்குப் பிறந்தாரோ அவருடைய பெயரைச் சொல்லித் தான் அவருடைய பிள்ளையை அழைக்க வேண்டும் என்று குர்ஆன் ஆணித்தரமாக உரைக்கிறது. உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கிவிட மாட்டான். இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும்இ அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள்-அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்;. அல்குர்ஆன் (33:38)

ஆகவே ஸைனப் (ரலி) அவர்களுடைய ஸைத் (ரலி) அவர்களுடனான திருமனம் இஸ்லாமிய சமுதாய சீர்திருத்த அடிப்படையில் நடத்தப்பட்டுஇ அது மணவிலக்குப் பெற்றதன் பின்னர் அதன் மூலம் மற்றொரு சீர் தீருத்தத்தை செய்ய நாடிய அல்லாஹ் அண்ணலாருக்கு அவர்களை மணமுடிக்கச் செய்கிறான். இத்திருமனமும் தியாகத்தின் அடிப்படையில் அமைந்ததாகும் என்பதை மேற்கானும் சம்பவங்கள் மூலம் படிப்பினை பெற கடமைப்பட்டுள்ளோம்.



அன்னை ஜூவைரியா ( ரலி)...

அன்னை ஜூவைரியா ( ரலியல்லாஹூஅன்ஹா ) அவர்கள்.
அன்னையவர்கள் யூத குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்இ பனூ முஸ்தலக் கோத்திரத்தின் தலைவராகிய ஹாரித் பின் அபூதர் என்பவரது மகளாவார்கள் ஹாரித் பின் அபூதர் மிகப்பெரிய வசதி படைத்தவராவார். தந்தையவர்களுடைய பதவியின் பகட்டிலும்இ செல்வச் செறுக்கிலும் முழுக்க முழுக்க ஓர் இளவரசிப் போன்று மிடுக்குடன் வாழ்ந்து வந்தார்கள். அன்னையவர்களது இயற்பெயர் பரா என்பதாகும் அன்னையவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப்பின்பு அண்ணல் அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜூவைரியா என்று அழைக்கப்பட்டார்கள்.

யூத குலத்தில் பனூ முஸ்தலக் கோத்திரம் என்பது அன்றைய யூதர்களிடத்தில் மிகப்பெரும் செல்வாக்கைப் பெற்றக் கோத்திரமாகும் அக்கோத்திரத்தின் தலைவர் ஹாரித் பின் அபூதருக்கு மதீனாவில் நிலைப் பெற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீது ஒருக் கண்ணோட்டம் இருந்து வந்ததுஇ அத்துடன் தனது கோத்திரத்து மக்களிடத்திலும் இஸ்லாத்தைப் பற்றின தவறான சித்தாந்தத்தையும் விதைத்து விட்டிருந்தார்இ அதனால் மதீனாவின் மீது போர் தொடுத்து முஸ்லீம்களை ஆரம்பத்திலேயே நசுக்கி விடுவது எனும் முடிவுக்கு வருகிறார்கள்.

ஹாரித் பின் அபூதர் மதீனாவை தாக்க படை திரட்டிக் கொண்டிருந்த செய்தியறிந்த அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது ரானுவ உளவுப் பிரிவை தகவல் சேகரிக்க பனூ முஸ்தலக் கோத்திராத்தாரிடையே அனுப்பி வைக்கிறார்கள். எதிரணியினர் பெரும் படை ஒன்றை தயார் படுத்தி வருவதை இஸ்லாமிய ரானுவ உளவுப்பிரிவு அண்ணல் அவர்களிடம் ஊர்ஜிதப் படுத்துகிறது (இப்பொழுது இயங்கும் உளவுப்பிரிவுபோல்இ கருத்து கணிப்பு போல் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக்கூறி மக்களை மடையர்களாக்குவதும்இ ஆட்சியாளர்களை மமதை கொள்ளச் செய்வதும் போல உள்ள உளவுப் பிரிவல்ல அன்று செயல்பட்ட உளவுப்பிரிவு உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் புகுந்து உண்மை நிலையைக் கண்டறிந்து இம்மியளவும் மாற்றமில்லாமல் உண்மையை உரைத்துக் கூறுபவைகளாக செயல்பட்டு வந்ததுஇ பலவேளைகளில் திரும்பியும் கூட வரமுடியாத அளவுக்கு அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன ) உளவுப்பிரிவு ஊர்ஜிதப் படுத்தியதும் அண்ணல் அவர்கள் தங்களுடைய இஸ்லாமியப் படையையும் தயார் செய்கிறார்கள்.

இரண்டு படைகளும் ஓரிடத்தில் வலுவாக மோதுகிறது அதில் இஸ்லாமியப் படை மபெரும் வெற்றி வாகை சூடுகிறதுஇ யூதப் படையின் எதிரணியில் ஏராளமான பேர் சிறை பிடிக்கப் படுகிறார்கள். அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் போர் தர்மம் பேணப்படுபவர்களாக இருந்தார்கள் தாங்கள் முன்னின்று நடத்திய எந்த யுத்தத்திலும் எதிரிப்படைகள் தோல்வியைத் தழுவுவதாக இருந்தால் உடனடியாக தங்களது தாக்குதலை நிருத்தி விடுவார்கள் அதன் பிறகு கைது செய்யத் தொடங்குவார்கள் தொடர்ந்து விரட்டிச் சென்று கொல்லமாட்டார்கள். ( இந்தப் போர் தர்மம் அவர்களுடைய மறைவிற்குப் பிறகும் அவர்களுடைய உம்மத்தார்கள் தொடர்ந்து பின் பற்றி வந்தார்கள் இறுதியாக கடந்த நூற்றாண்டில் நடந்த சலாஹூத்தீன் அய்யூபி அவர்களுடைய பாலஸ்தீன மீட்பு போர் வரை அண்ணலார் வகுத்த போர் தர்மம் கடைபிடித்து வந்ததை குறிப்பிட்டுக் கூறமுடியும் )

அதனடிப்படையில் அபூ முஸ்தலக் கோத்திரத்தாருடனான யுத்தத்தில் அவர்கள் தரப்பில் தோல்வி உறுதியானதும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது படைக்கு தாக்குதலை நிருத்த உத்தரவிடுகிறார்கள் அதையடுத்து எதிரிகள் கைது செய்யப்படுகிறார்கள். கைதிகளுடைய மத்தியில் அன்னை ஜூவைரியா (ரலி) அவர்களும் ஒரு கைதியாக நிற்கிறார்கள் பனூ முஸ்தலக் படையில் அன்னையவர்களின் கணவர் முஸாஃபா பின் சஃப்வானும் போர் வீரராக வந்திருந்ததால் அவருடன் அன்னையவர்களும் வந்திருந்தார்கள்இ யுத்தத்தில் அன்னையவர்களது கணவர் கொல்லப்படுகிறார் தந்தையார் சிறைபிடிக்கப் படுகிறார்.

யுத்தம் முடிந்து கைதிகளும்இ கனீமத் பொருட்களும் பிரித்து பங்கிடப்படும் பணி நடைபெறுகிறது அதில் அன்னையவர்கள் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கு ஒதுக்கப் படுகிறார்கள்.

சிறைக் கைதிகள் யாவரும் வெற்றி வீரர்களுக்கு பங்கிடப் பட்டதும் அடுத்த கனமே அவர்கள் அடிமைகள் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் இது தான் அன்றைய நியதியுங்கூட. அதனால் அன்னையவர்கள் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் கீழ்; அடிமையாகிறார்கள் அன்னையவர்கள் தங்களுடைய கடந்த கால படாடோப வாழ்க்கையை நினைத்துப் பார்த்து கண்ணீ;ர் வடிக்கிறார்கள்இ கூனிக் குறுகுகிறார்கள் அன்னையவர்கள் படித்தவர்கள் என்பதால் சட்டென்று சுதாரித்துக் கொண்டவர்களாக அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களை அனுகி கீழ்கானுமாறு கண்ணீர் ததும்ப முறையிடுகிறார்கள்.

இறைத் தூதர் அவர்களே ! நான் ஒரு உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவள்இ ஒரு பெருங்கோத்திரத்து தலைவனுடைய சீரும் சிறப்புமாக வளர்ந்த மகள் நான் எவ்வாறு ஓர் அடிமையாக வாழமுடியும் நீங்கள் மனது வைத்தால் என் விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுக்க முடியும் என்று முறையிடுகிறார்கள்.

( அண்ணல் அவர்களிடத்தில் இயல்பிலேயே ஒரு நற்குணம் குடிகொண்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் யார் எதைக் கேட்டுச் சென்றாலும் இல்லை என்றோஇ அறவே முடியாது என்றோ அருத்து நிருத்துக் கூறி அனுப்பியது கிடையாது என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். கருனையே உருவான ஹாத்தமுன் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஜூவைரியா (ரலி) அவர்களுடைய கண்ணீருடனான கோரிக்கையை செயல்படுத்த முன்வருகிறார்கள்.)

தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கு மீட்பு தொகையை செலுத்தி விட்டு அன்னையவர்களை அண்ணல் அவர்கள் மீட்டெடுக்கிறார்கள் அன்னையவர்கள் சுதந்திரமடைந்ததும் முதல் பணியாக இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி விடுகிறார்கள்.

நடந்து முடிந்த யுத்தத்தில் அன்னையவர்களுடைய கணவர் கொல்லப்பட்டு அன்னையவர்கள் விதவையாக இருந்ததாலும்இ அன்னையவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாலும் அண்ணல் அவர்கள் அன்னையவர்களை திருமனம் செய்து கொள்கிறார்கள்.

இச்செய்தியறிந்த அன்னையவர்களுடைய தந்தையார் ஹாரித் பின் அபூதர் அவர்கள் தனது மகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடத்திய விதமறிந்து அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் அவரது குடும்பமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறது .அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும் அண்ணல் அவர்கள் அவரையும் விடுதலை செய்து விடுகிறார்கள்.

அன்னையவர்களை அண்ணல் அவர்கள் திருமனம் செய்து கொண்ட செய்தியறிந்து யுத்தத்தில் சிறை பிடிக்கப்பட்டு பங்கீடு செய்யப்பட்ட அனைத்து கைதிகளையும் இஸ்லாமிய ரானுவ வீரர்கள் விடுதலை செய்து விடுகிறார்கள். விடுதலை பெற்ற அனைவரும் தங்களது சொந்த பூமிக்குச்சென்று தங்களது குடும்பத்தாரிலும்இ கோத்திரத்தாரிலும் ஏராளமான பேரை இஸ்லாத்தில் இணைத்து விடுகிறார்கள்.

இச்சம்பவத்திற்குப் பிறகு யூதர்களுக்கும்இ முஸ்லிம்களுக்குமிடையில் நிலவி வந்த பகையுணர்வுகள் குறைந்து இணக்கம் ஏற்படுகிறது.

அன்பிற்குரிய சகோதரர்களே !
இத்திருமணம் இரண்டு பெரிய நோக்கங்களின் அடிப்படையில் நடத்தப்;பட்டதாகும்.

எ ஓன்று இரு சமூகத்தாரிடையே நிலவி வந்த சமூகப் பகையுணர்வையை குறைத்து இணக்கத்தை ஏற்படுத்தும் அடிப்படையிலாகும்

எ மற்றொன்று மதீனாவின் குடிமக்களாக இருந்த யூதர்கள் மத்தியிலும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமுமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு முந்தைய மதத்தைச் சார்ந்த மக்களை அழித்தொழிப்பற்காக வந்தவர்கள் என்று ஒரு தவறான அபிப்பிராயம் முஸ்லீமல்லாத மக்களிடத்தில் நிலவி வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) எந்த மனித சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் அல்ல! மாறாக அனைத்து சமுதாயத்து மக்களையும் நேர்வழிப்படுத்த முழுஉலகிற்கும் அருட்கொடையாய் அவதரித்தவர்களேயாகும். அல்லாஹ் கூறுகிறான் நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை 21:107. அந்த தவறான அபிப்பிராத்தை உடைத்தெறிவதற்காக அன்னையவர்களை அவர்களே மணமுடித்துக் கொள்கிறார்கள். அண்ணல் அவர்கள் மணமுடிக்காமல் வேறு ஒருவருக்கு மணமுடித்து கொடுத்திருந்தால் யூதர்களிடம் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது.

மதீனாவில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு மதீனாவின் குடிமக்களாக நிறைய யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள் மதீனாவை வெளியிலிருந்து எந்த நாடும் தாக்குவதற்கு முற்பட்டால் இனபேதம் பாராமல் மதீனாவின் குடிமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரிப் படைகளை எதிர்த்து தாக்க மதீனாவின் இறையான்மைய காக்க முன்வர வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ் மதீனா வாழ் யூதர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருந்தனர். இந்த யூதர்களும் மதஅடிப்படையில் பிரிந்திடாமல் நாட்டின் இறையான்மைக்கு வேட்டு வைக்கால் இருக்க வேண்டியும் இத்திருமணத்தின் மூலம் இணக்கத்தை ஏற்படுத்த விரும்பினார்கள். ( ஒருசில விஷமிகளும் உள்ளுக்குள் குரோத மணப்பான்மையில் செயல்படவே செய்தனர் அவர்கள் அண்ணலாருடைய மறைவிற்குப் பின் வளர்ந்து இன்று விஷ விருட்ஷமாக வீற்றுள்ளனர் )

அண்ணல் அவர்களுடைய நன்னோக்கில் நடத்தப்பட்ட இத்திருமணத்தின் காரணமாக வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்ததை தனது எதிரியாக கருதி வந்த அன்னையவர்களுடைய தந்தை முதலில் இஸ்லாத்தை ஏற்கிறார் அவர் மூலம் அன்று சுற்றுப் புறத்து யூதர்கள் பெறுவாரியாக இஸ்லாத்தை தழுவுகிறார்கள்இ மதீனத்து குடிமக்களாகிய யூதர்களுடைய மனதிலும் மனநிறைவு ஏற்படுகிறது.

அன்பிற்குரிய சகோதரர்களே !
அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் சிறைக் கைதிகள் பங்கிடப்படும் போதே அன்னையவர்களை தங்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். காரணம் அன்னையவர்கள் கைதிகளின் கூட்டத்தில் முழு நிலவைப்போல் நின்று கொண்டிருந்தார்கள் அன்னையவர்களுடைய அழகைப்பார்த்து ஆயிஷா (ரலி) அவர்களே வியந்து போனதாக அறிவிப்புகள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட அழகு நிறைந்தவர்களை அண்ணல் அவர்கள் தங்களுடைய பங்கில் ஒதுக்காமல் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுடைய பங்கில் ஒதுக்கியதிலிருந்து அண்ணல் அவர்கள் பெண்களின் மீது மோகம் கொண்டவர்களாய் இருந்ததில்லை அதன் காரணத்தால் பல திருமணங்களை முடிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். அன்னையவர்களுடைய உருக்கமான கோரிக்கையை ஏற்றும் அன்றைய யூதர்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதிருந்த வெறுப்புணர்வைப் போக்கி இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மட்டும் இத்திருமணம் நடைபெறுகிறது.


அன்னை உம்மு ஹபீபா (ரலி)...

அன்னை உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்கள்

அன்னையவர்களின் இயற்பெயர் ரம்லா என்பதாகும் அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் மகளாவார்கள்இ புகழ்பெற்ற நபித் தோழர்களாகிய யஜீத் (ரலி) முஆவியா (ரலி) அவர்களுடைய சகோதரியுமாவார்கள்.

அன்னையவர்கள் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஸ் அவர்களுக்கு மனமுடித்துக் கொடுக்கப் பட்டிருந்தார்கள். உபைதுல்லாஹ் அவர்கள் மக்காவில் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்பே சிலை வணக்கத்தை புறக்கனித்து வாழ்ந்தார்கள் மக்காவில் அறங்கேறிக் கொண்டிருந்த பல தீமைகளை வெறுத்து வாழ்ந்தார்கள் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே தழுவிக் கொண்டு முஸ்லிமாகி கொண்டார்கள் அதனால் அவர்களது அன்பு மனைவி உம்மு ஹபீபா அவர்களும் இஸ்லாத்தை தழுவிக் கொண்டு முஸ்லிமானார்கள் .

குறைஷிகளின் நெருக்குதலுக்கு இவர்களும் ஆளானார்கள் அபிசீனியாவிற்கு இடம் பெயர்ந்த இரண்டாவது குழுவில் இவர்களும் இடம் பெற்றனர் அங்கு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அதற்கு ஹபீபா என்று பெயரிட்டு கொஞ்சி மகிழ்ந்தார்கள் ( இது முதல் அன்னையவர்கள் உம்மு ஹபீபா என்றழைக்கப் பட்டார்கள்) இன்பகரமாக அவர்களது வாழ்க்கைச் சக்கரம் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

உபைதுல்லாஹ் அவர்கள் ஏற்கனவே கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தான் இடம் பெயர்ந்து குடியமர்ந்த அபிசீனியா முழுக்க முழுக்க கிருஸ்தவ நாடு என்பதாலும் அங்குள்ள சில கிருஸ்தவர்களுடைய மூளைச் சலவைக்கு அவர் ஆளாகிறார் அதனால் தனது பழைய கிருஸ்தவ மதத்திற்கு மாறியும் விடுகிறார். (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்லஇ மாறாக தான் நாடியவர்களையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;.... 2:272

சகோதரர்களே !
உபைதுல்லாஹ் அவர்கள் இஸ்லாம் அறிமுகமாதற்கு முன்பே சிலை வணக்கத்தை புறக்கனித்து வாழ்ந்தவர் இஸ்லாம் அறிமுகமாகி சிலை வணக்கத்தை எதிர்த்த காலகட்டத்தில் இஸ்லாத்தை ஆரம்ப காலகட்டத்திலேயே வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் அத்தனை சிறப்பு மிக்க ஒருவர் மீண்டும் மதம் மாறி ஏற்கனவே வணங்க மறுத்த சிலை வணக்கத்தை வணங்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் தான் நாடிவர்களுக்கு மட்டுமே அல்லாஹ் நேர்வழியை கொடுப்பான் என்பதால் நாமும் தொடர்ந்து நேர்வழியில் நீடிக்க அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும்.

பாவங்கள் மன்னிக்கப் பட்டு விட்டதாக வாக்களிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தொடர்ந்து தனது நேர்வழிக்காக பிரார்த்தித்துள்ளனர். அதனால் நாமும் அவர்களது வழியில் அல்லாஹ்வுடைய நேர்வழியைப் பெற வேண்டி தொடர்ந்து பிரார்த்தித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் நாம் கூடுமானவரை அல்லாஹ்வின் வழியில் தன்னுடைய நேரத்தை செலவிடக் கூடிய மக்களுடன் இணைந்திருக்க முயற்சிக்க வேண்டும்இ அல்லாஹ்வுடைய வழியை தவிர்த்து உலக சுகபோக வாழ்வில் மூழ்கி கிடப்பவர்களுடன் தோழமையை ஏற்படுத்திக் கொண்டு நாமும் திரிந்தால் கன்றோடு......... என்பது போல் ஆகி விடுவதற்கு பெரிதும் வாய்ப்புள்ளது.

ஆனாலும் அன்னையவர்கள் உறுதியான ஈமானியப் பிடிப்புடன் இஸ்லாத்தில் நீடிக்கிறார்கள்இ உபைதுல்லாஹ் அவர்கள் தான் எடுத்த முடிவு சரியா ? தவறா ? எனும் நிலைக்கு தள்ளப் பட்டதால் நிலை தடுமாறி அதிமாக குடிக்கத் தொடங்கி நோய்வாய்பட்;டு இறந்தும் விடுகிறார்.

அன்னையவர்கள் தனது மகளுடன் தனித்து வாழ்கிறார்கள்இ அவர்களுடன் பயனித்து வந்து குடியமர்ந்த ஏனைய முஸ்லிம் குடும்பங்கள் ஆதரவாக இருந்து வருகிறார்கள் சிறிது காலங்களுக்குப் பிறகு அவர்களில் பல குடும்பங்கள்( மொத்தமுமல்ல) மீண்டும் நாடு திரும்ப முடிவு செய்கிறது அன்னையவர்களையும் தங்களுடன் நாடு திரும்ப அழைக்கிறார்கள் ஆனாலும் அன்னையவர்கள் வரமறுத்து விடுகிறார்கள் காரணம் தனது கணவரும் இறந்து விட்டதால் தனித்து திரும்பினால் தனது தந்தை தன்னை மதம் மாறும் படி வற்புருத்தலாம் என்று நினைத்ததால் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

அபீசீனியாவிலிருந்து நாடு திரும்பி வந்தவர்கள் அண்ணல் அவர்களிடத்தில் அன்னையவர்களுடைய உறுதியான இஸ்லாமிய பற்றுதலையும்இ அன்னையவர்களுடைய கனவர் மதம் மாறி இறந்து விட்ட செய்தியையும் தெரிவிக்கிறார்கள்.

இதை செவியுற்ற அண்ணல் அவர்கள் கவலை அடைகிறார்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் சம்மதித்தால் அவர்களை தான் திருமனம் செய்து கொள்வதாக அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

அன்னையவர்களுடைய துயரச் செய்தியறிந்த நஜ்ஜாஷி அவர்கள் அண்ணல் அவர்களுடைய கடிதம் கண்டு சந்தோஷப் படுகிறார்கள்;. உடனடியாக அன்னையவர்களுக்கு அண்ணல் அவர்கள் அனுப்பிய செய்தியை ஒருவர் மூலம் தூது அனுப்பி வைக்கிறார் இச்செய்தியறிந்து அன்னையவர்கள் சந்தோஷப் படுகிறார்கள் மன்னரிடமிருந்து தூதுச்செய்தியை கொண்டு வந்தவருக்கு தன்னிடமிருந்த வெள்ளி நகைகளில் சிலதை பரிசாகவும் கொடுத்தனுப்புகிறார்கள்.

இதையடுத்து அன்னையவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராக கொடுத்து அண்ணல் அவர்களுடைய சிறிய தந்தை ஜாபிர் (ரலி) மற்றும் காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய முன்னிலையில் நஜ்ஜாஷி அவர்களுடைய அரன்மனையில் திருமன ஒப்பந்தம் நிறைவேறுகிறது அதனையடுத்து அன்னையவர்கள் மன்னருடைய பாதுகாப்பில் மதீனாவுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள் .

இதனை செவியுற்ற அன்ளையவர்களின் தந்தையாரும் குறைஷி குலத்து முதுபெரும் தலைவருமான அபூசுஃபயான் அவர்கள் கோபப் படுவார் என்று எதிர் பார்த்தவர்களுக்கு மத்தியில் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது கனவரை இழந்து அனாதரவாய் அண்ணிய தேசத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது மகளுக்கு வாழ்வளித்து கவுரவித்த அண்ணல் அவர்கள் மீது பாசமும்இ மரியாதையும் ஏற்படுகிறது.

அன்பிற்குரிய சகோதரர்களே !
அன்னையவர்களுடன் அண்ணல் அவர்களுக்கு நடத்தப்பட்ட இத்திருமனம் இரண்டு நோக்கங்களின் அடிப்படையிலானதாகும்.

அன்னையவர்களுடைய கனவர் மதம் மாறியபின் பலதடவை அன்னையவர்களை தனது கிருஸ்தவ மதத்திற்கு மாறி விடும் படி வற்புருத்தினார் அன்னையவர்கள் அறவே சம்மதி;க்கவில்லை அதற்கடுத்து அன்னையவர்களுடன் பயனித்த ஏனைய முஸ்லிம்கள் நாடு திரும்புகையில் அன்னையவர்கள் தனது தந்தை தன்னை மதம் மாற்றி விடுவதற்கு பெரிதும் வாய்ப்பிருக்கிறது என்றெண்ணி வரமறுத்து அங்கேயே தங்கியும் விடுகிறார்கள். வேறு ஒரு திருமனமும் செய்து கொள்ளவில்லை. அன்னையவர்களுடைய தியாகத்தை கருத்தில் கொண்டு அன்னையவர்களுக்கு வாழ்வுக் கரம் நீட்டுகிறார்கள் அண்ணல் அவர்கள்.

அடுத்து அவர்களது மற்றொரு நோக்கம் அன்னையவர்களது தந்தை அபூ சுஃபயான் அவர்கள் இஸ்லாத்தின மீது கொண்ட பகையுணர்வு குறைந்து விட வேண்டும் என்பதுமாகும் அண்ணல் அவர்களின் எண்ணத்தின் பிரகாரம் அபூசுஃப்யான் அவர்களது இஸ்லாத்தின் மீதான எதிர்ப்பு வேகம் குறைந்ததுடன் மக்கா வெற்றிக்குப் பின் தானும் தனது மகன்களுமாகிய யஜீதும்இ முஆவியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.

ரலியல்லாஹீ அன்ஹூ என்கிற அல்லாஹ்வால் பொருந்திக் கொண்ட நல்லடியார்கள் வரிசையில் இடம் பெற்று விடுவதுடன் துருக்கியை தலைநகராகக் கொண்டு இயங்கிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளாக திகழ்ந்ததுடன் ரோமாபுரிஇ பாரசீகத்தை அடுத்து ஐரோப்பியாவில் இஸ்லாம் நுழைவதற்கு முதல் அடித்தளத்தை ஸ்பெயின் மூலமாக உருவாக்கினார்கள்.



அன்னை சஃபியா ( ரலி)...

அன்னை சஃபியா பின்த் ஹூஅய் ( ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்)

அன்னையவர்கள் யூத குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்இ அன்னை ஜூவைரியா (ரலி) அவர்களைப் போலவே இவர்களும் போர் களத்தில் கைதியாக பிடிபட்டவர்களாவார்கள்.

அன்னையவர்களது இயற்பெயர் ஜைனப் என்பதாகும் போரில் கிடைத்த மதிப்புள்ள பொருளை சபிய்யா என்று அழைப்பதுண்டு அதனடிப்படையில் அன்னையவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டப் பின் அண்ணல் அவர்கள் சபிய்யா என்ற பெயரை இட்டு அழைத்தார்கள்.

அன்னைளயவர்கள் தனது 14வது வயதில் ஸலாம் பின் மிஸ்காம் என்பவருக்கு திருமனம் செய்து கொடுக்கப் பட்டிருந்தார்கள் இருவருக்கும் மத்தியில் கசப்புணர்வு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள் அதற்கடுத்து கினானா பி;ன் ரபீஃ என்பவருக்கு மனமுடித்துக் கொடுக்கப்ட்டிருந்தார்கள்.

அன்னையவர்ளுடைய தந்தை பெயர் ஹூஐய் பின்த் அக்தப் என்பதாகும்இ மதீனாவிலிருந்து சிரியா செல்லும் வழியில் உள்ள கைபர் கனவாயின் பனூ குரைளா எனும் வலிமை வாய்ந்த கோத்திரத்தின் தலைவாராவர்இ இவருக்கும் மதீனாவில் நிலை பெற்றிருந்த இஸ்லாமிய பேரரசின் மீது ஒரு பார்வை இருக்கவேச் செய்தது அதனால் தங்களுடைய மக்களை ஏவி விட்டு முஸ்லீம்களை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தார்.

அதனால் கைபர் வழியே சிரியாவுக்குப் பயணிக்கும் முஸ்லிம்களுக்கு கைபர் வாழ் யூதர்கள் தொடர்ந்து தொந்தரவுகள் கொடுத்து வந்தனர்இ சமாதான பேச்சு வார்த்தைக்காக தொடர்ந்து தூதுக்குழுக்களை அண்ணல் அவர்கள் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள் சமாதான உடன்படிககை செய்வதும் அதை மீண்டும் அவர்கள் முறிப்பதுமாக இருந்து வந்தது அதனால் கைபர் மீது படையெடுப்பதை தவிர வேறு வழியில்லை எனும் இறுதி நிலைக்கு இஸ்லாமிய ரானுவம் தள்ளப்படுகிறது.

போர் படைத் தளபதியாக அண்ணல் அவர்கள் இஸ்லாமிய ரானுவத்துடன் கைபர் கணவாய்க்குள் நுழைகிறார்கள் உள்ளுக்குள் நுழைந்ததும் அண்ணல் அவர்கள் '' கைபர் வீழ்ந்து விட்டது இக்காலை இம்மக்களுக்கு மேசமானதாகி விட்டது '' என்று மூன்று முறை கூறுகிறார்கள்

(( உலகில் தோற்றுவிக்கப்பட்ட இறைத் தூதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சாதனை செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கி கவுரவித்தான் அதில் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யும் ஆற்றலை வழங்கி கவுரவித்தான் அவர்கள் எதைப் பற்றியெல்லாம் முன்னறிவிப்பு n;சய்தார்களோ அவையெல்லாம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும் நடந்தது இறையடிச் சேர்ந்த பின்பு அவர்களுடைய தோழர்களாகிய கலீபாக்களுடைய ஆட்சி காலத்திலும் நடந்தது இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது ))

சுமார் 1500 பேர் கொண்ட இஸ்லாமிய போர் வீரர்கள் புடைசூள பத்து நாட்கள் முகாமிட்டு போர் செய்கிறார்கள் இறுதியில் கைபர் வீழ்கிறது அண்ணல் அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறுகிறது சுப்ஹானல்லாஹ்.

கனீமத் பொருட்களும்இ கைதிகளும் பங்கீடு செய்யும் பணி தொடருகிறது கைதிகளில் அன்னை சபியா (ரலி) அவர்கள் நிற்கிறார்கள்; யுத்தத்தில் அன்னையவர்களது தந்தையும்இ அவர்களது இரண்டாவது கணவரும் கொல்லப் படுகிறார்கள் அன்னையவர்கள் விதவையாவதுடன் தந்தையையும் இழந்து நிற்கதியாகிறார்கள் விடுகிறார்கள் .

போர் கைதிகள் பங்கீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கையில் திஹ்யா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து தனக்கு ஒரு பெண்ணை தருமாறு கோருகிறார்கள் அப்பொழுது அண்ணல்

அவர்கள் திஹ்யா (ரலி) அவர்களிடம் விருப்பப்பட்ட பெண்ணை தேர்வு செய்து கொள்ளும்படி கூறுகிறார்கள் அதன் படி திஹ்யா (ரலி) அவர்கள் அன்னை சபியா (ரலி) அவர்களை தேர்வு செய்து விடுகிறார்கள்.

அன்றைய காலகட்டம் என்பது மன்னராட்சியின் காலமாகும் மன்னருக்குப் பின் மன்னருடைய மகன் மன்னர் மகன் இல்லையேல் மகள் ராணியாவார்இ ஆக அன்னை சபியா (ரலி) அவர்கள் அவர்களது தந்தைக்குப் பின் அவர்களே கைபரின் ராணியாவார்கள் போருக்கு முன் அவர்கள் கைபரின் பட்டத்து இளவரசியாவார்கள் இப்படிப்பட்ட ஒருவர் சாதாரண போர் வீரருக்கு அடிமையாக வழங்கப்பட்டதை நபித் தோழரில் ஒருவர் ஆட்சேபிக்கிறார்கள்.

அண்ணல் அவர்களை நோக்கி இறைத்தூதர் அவர்களே ! திஹ்யா அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பெண் குரைளா மற்றும் நளீர் கோத்திரத்தின் தலைவியாவார்கள் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் படைத் தளபதியே தகுதியானவராவார் அதனடிப்டபடையில் தாங்கள் அப்பெண்ணை தேர்வு செய்து கொள்வதே சரியானதாகும் என்று கூறுகிறார்கள்.

அவர்களது சிறந்த ஆலோசனையை ஏற்று அண்ணல் அவர்கள் திஹ்யா (ரலி) அவர்களுக்கு மீட்பு தொகையை செலுத்தி விட்டு அன்னையவர்களை விடுதலை செய்கிறார்கள்.

அதன் பின் விடுதலை செய்ய திஹ்யா (ரலி) அவர்களுக்கு வழங்கிய மீட்பு தொகையை மஹராக்கி அன்னையவர்களை திருமனம் செய்து கொள்கிறார்கள் .

அன்பிற்குரிய சகோதரர்களே !

அன்னை சபியா (ரலி) அவர்களின் மீது ஆசை கொண்டு இத்திருமனம் நடைபெறவில்லை நபித் தோழர் ஒருவர் கொடுத்த ஆலோசனை தொலை நோக்கு சிந்தனை கொண்டதாகும் காரணம் கண்டிப்பாக ஒரு பட்டத்து இளவரசி சாதாரண ஒருவரிடம் அடிமையாக வாழமுடியாது மனம் ஒப்பாது கருத்து வேற்றுமை கண்டிப்பாக ஏற்படும்.

இன்றும் பார்க்கிறோம் ஒரு நாடு மற்றொரு நாட்டை வெற்றி கொள்ளும் போது முதலில் அந்த நாட்டின் அரசக் குடும்பம் அழிக்கப்படும் அல்லது நாடு கடத்தப்பட்டு பாழும் சிறையில் தள்ளப்பட்டு சித்ரவதை செய்யப் படும் கண்ணியமும்இ மரியாதையும் கண்டிப்பாக கிடைக்காது தோல்விக்குப் பிறகு அவர்களது பழைய படாடோபத்தையெல்லாம் எதிர் பார்க்க முடியாது.

முஸ்லிம்கள் வெற்றிகொள்ளும் யுத்தத்தில் பிடிக்கப்படும் சிறைக் கைதிகளுடைய நிலை முற்றிலும் அதற்கு வித்தியாசமானதாகும் நாம் ஏற்கனவே எழுதிய படி கடைசியாக நடந்த சலாஹூத்தீன் அய்யூபி அவர்களுடைய பாலஸ்தீன மீட்பு போர் வரை வரலாற்று நூல்களின் ஆதாரத்தின் அடிப்படையில் கைதிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட்ட விதத்தை எம்மால் நிரூபிக்க முடியும்.

அவ்வாறு அந்த இஸ்லாமிய போர் வீரர்கள் சகிப்புத் தன்மையுடனும் இ போர் தர்மங்கள் மீறப்படாமலும் இறையச்சத்துடன் போர் செய்ததால் மிக கம்மியான எண்ணிக்கையில் உள்ள போர் வீரர்கள் பெரும் பெரும் வல்லரசுகளை இன்றை நேட்டோப் பவர்களைப் போல் உள்ள நாடுகளை வீழ்த்தி வென்று காட்டினார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்துஇ தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 8:66



அன்னை மைமூனா (ரலி)..

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இதற்கு முன்பு அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய பத்தாவது திருமனத்தைப் பார்த்தோம் இப்பொழுது அவர்டகளுடைய பதினொன்றாவது திருமனத்தைப் பாரப்போம்

அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி) அன்ஹா அவர்கள்

அன்னையவர்களின் இயற்பெயர் பரா என்பதாகும் அன்னையவர்களின் தந்தையார் பெயர் ஹாரித் பின் ஹஸன்இ தாயார் பெயர் ஹின்ந் பின் அவ்ஃப் என்பதாகும் அன்னையவர்களுடன் உடன் பிறந்தவர்களில் ஏராளமான பேர் நபித் தோழர் தோழியரில் உள்ளனர் அதில் குறிப்பாக அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மனைவியாவார்கள்இ உம்முல் ஃபழ்லு பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களது மனைவியாவார்கள்இ லுபாபா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் காலித் பின் வலீத் அவர்களது தாயாவார்கள் இவர்கள் மூவரும் அன்னையவர்களது உடன் பிறந்த சகோதரியாவார்கள்.

அன்னையவர்கள் மசூத் பின் அம்ர் என்பவருக்கு மனமுடித்துக் கொடுக்கப்பட்டிருந்தார்கள். இருவருக்கும் கருத்து வேற்றுமை எற்பட்டு மனவிலக்கு பெற்று விடுகிறார்கள்இ அதற்கடுத்து அபூ ருஹ்ம் பின் ஆம்ரி என்பவருக்கு மனமுடித்துக் கொடுக்கப் பட்டார்கள் அபு ருஹ்ம்; அவர்கள் சிறிது காலத்தில் இறப்பெய்தி விடுகிறார்கள்.

இப்பொழுது அன்னையவர்கள் விதவையாகி விடுகிறார்கள்இ மிகவும் இளம் வயதிலேயே இரண்டு திருமனம் செய்து இரண்டிலும் நிம்மதியாக வாழமுடியாமல் துர்பாக்கியசாலியாகி விடுகிறார்கள்.

இளம் வயிதிலேயே இவ்வாறான துயர நிலையை அடைந்த அன்னையவர்கள் மீது அண்ணல் அவர்களுடைய சிந்தனை திரும்புகிறது மேலும் அன்னையவர்கள் தமது தோழர்களின் இரத்த உறவுக் காரராகவும் ( ஹகாபாக்கள் வட்டத்தில் ) இருக்கிறார்கள் அதனால் அன்னையவர்களுக்கு அண்ணல் அவர்களே வாழ்வுக் கரம் நீட்டுவது எனும் முடிவுக்கு வருகிறார்கள்.

அன்னையவர்களிடம் அண்ணல் அவர்கள் சம்மதம் பெற்று வரத் தூது அனுப்புகிறார்கள். அன்னையவர்களும் அண்ணல் அவர்களை மணந்து கொண்டு இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில் இடம் பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.

அன்னையவர்களின் தரப்பில் அப்பாஸ் (ரலி) அவர்களும் அண்ணல் அவர்களுடைய தரப்பில் ஜஃபர் பின் அபூ தாலிப் (ரலி) அவர்களும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உம்ரா நிறைவு செய்த பின் திருமணம் நடைபெறுகிறது. உம்ரா நிறைவு பெற்று விட்டதால் குறைஷிகளுடனான ஒப்பந்தம் நிறைவு பெறுவகிறது அதனால் மக்காவாசிகள் அதற்கு மேல் மக்காவின் எல்லையில் மதீனா வாசிகளை தங்க அனுமதி மறுக்கிறார்கள் அதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்து சுமார் பத்து மைல் தொலைவிலுள்ள '' ஸரிஃப் '' என்ற இடத்தில் கூடாரம் அடித்து தங்குகிறார்கள்.

அன்னையவர்கள் தர்ம சிந்தனையுடடையவர்களாகவும்இ சிறந்த மார்க்கப் பற்றுள்ளவர்களாகவும் அண்ணல் அவர்களுடைய மரணத்திற்கு பின் மக்களிடத்தில் மார்க்க விஷயங்களை அதிகமதிகம் போதிக்க கூடியவர்களாகவும்இ ஏராளமான நபிமொழிகளை அறிpவிப்பவர்களாகவும் திகழ்ந்தார்கள் அல்லாஹ்வுடைய அச்சமும் மறுமையின் நம்பிக்கையும் அதிகமாக அன்யைவர்கனளிடத்தில் இருந்து வந்தது அன்னையவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் மார்க்;கத்திற்கு முரனான எந்த விஷயத்தையும் தன்னை சுற்றியுள்ளவர்களால் நடத்த விட மாட்டார்கள்.

அன்னையவர்கள் அபார ஞாபக சக்தியுடையவர்களாக திகழ்ந்தார்கள் அதனால் அன்னையவர்கள் அண்ணல் அவர்களுடைய மரணத்திற்குப்பின் ஏihளமான நபிமொழிகளை அறிவித்தார்கள் அதனால் அண்;ணல் அவர்கள் அன்னையவர்களை இஹ்ராம் உடையில் மணமுடித்தார்கள் என்று அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பால் பரவலான சர்ச்சை எழுந்ததை இஹ்ராம் முடிந்த பின்பே எனது திருமணம் நடந்தது என்று அன்னையவர்கள் கூறிய அறிவிப்பைக் கொண்டு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பை இரண்டாம் தரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அன்னையவர்களுடைய அறிவிப்பே உலமாக்களுடைய ஏகோபித்த முடிவாகவும் அமைந்தது அல்லாஹ் போதுமானவன்.

மேலும் அன்னையவர்களுடன் அண்ணல் அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் '' நீங்கள் மக்காவில் இறக்க மாட்டீர்கள்'' எனும் முன்னறிவிப்பை செய்தார்கள் அதன் பிரகாரம் அன்னையவர்களுடைய சக்ராத் ஹாலில் அண்ணல் அவர்கள் கூறிய முன்னறிவிப்பு நினைவுக்கு வந்ததும் மக்காவிலிருந்து இடம் பெயரந்து மதீனா நோக்கி புறப்படலானார்கள்.
அவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கையில் அன்னையவர்களை திருமனம் செய்து கூடாரம் அடித்து தங்கிய ' ஸரிஃப் ' என்ற இடம் வருகையில் அன்னையவர்களுக்கு மேலும் சக்ராத் ஹால் வேதனை அதிகரிக்கவே அவ்விடத்திலேயே கூடாரம் அடிக்கப் படுகிறது அவ்விடத்தில் அன்னையவர்களுடைய ரூஹ் பிரிகிறது (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம்இ ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்'' என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;. அல்குர்ஆன் 2:46. அண்ணல் அவர்கள் ஏற்கனவே கூடாரமடித்து அன்னையவர்களுடன் வீடு கூடிய அதே இடத்தில் அன்னையவர்களுடைய ரூஹ் பிறிந்தது அண்ணல் அவர்களுடைய முன்னறிவிப்புப் பிரகாரமே மக்காவை விட்டு வெளியில் அன்னையவர்கள் இறப்பெய்தினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது . (( உலகில் தோற்றுவிக்கப்பட்ட இறைத் தூதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சாதனை செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கி கவுரவித்தான் அதில் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யும் ஆற்றலை வழங்கி கவுரவித்தான் அவர்கள் எதைப் பற்றியெல்லாம் முன்னறிவிப்பு n;சய்தார்களோ அவையெல்லாம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும் நடந்தது இறையடிச் சேர்ந்த பின்பு அவர்களுடைய தோழர்களாகிய கலீபாக்களுடைய ஆட்சி காலத்திலும் நடந்தது இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது ))

அன்னையவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் அன்னையவர்களது ரூஹ் பிரிந்த இந்த அதே இடத்திலேயெ அடக்கம் செய்யவும் பட்டார்கள்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
இத்திருமணமும் அண்ணல் அவர்கள் அன்னையவர்களின் மீது ஆசை கொண்டு செய்ததாக வரலாறு கூறவில்லை அன்னையவர்களது முதல் திருமணம் மன ஒற்றுமை ஏற்படாமல் பிறிவு ஏற்படுவதாலும்இ அடுத்த திருமணத்தின் மூலம் வெகு விரைவில் விதவையாகி விடுவதாலும் இனி மூன்றாவது திருமணம் என்பது மிக நிதானமாக முடிவெடுத்து செய்ய வேண்டிய ஒன்றாக இருந்ததால் அதனடிப்படையில் அண்ணல் அவர்கள் அன்னையவர்களுக்கு நிரந்தர நிம்மதியான வாழ்வளிக்க முன் வருகிறார்கள் ( நாம் கூறும் நிரந்த வாழ்வு என்பது துனியா சம்மந்தப்பட்டது அல்ல மறுமையாகும் அன்றைய மக்கள் மறுமை வாழ்வை மட்டுமே நிரந்தர வாழ்வாக கருதினார்கள் அண்ணல் அவர்களுடைய மனைவி எனும் அந்தஸ்தைப பெறுவதன் மூலம் அன்னையவர்கள் சுவன வாழ்வை எட்ட முடியும் ) மறுமையின் நிம்மதியான நிரந்தர வாழ்வுக்காக அன்னையவர்களும் சம்மதிக்க இத்திருமனம் நடைபெறுகிறது. இத்திருமனத்துடன் அண்ணல் அவர்களுக்கு 11 திருமனம் நிறைவு பெறுகிறது

மிக்க நன்றி : பாறுக்