Monday, November 30, 2015

நபி முகம்மத் (ஸல்) அவர்களின் பெருந்தன்மை

பெருந்தன்மை !!
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இதற்கு முன்பு துமாமா (ரலி) அவர்கள் நிராயுதபாணியாக முஸ்லிம்களிடம் சிக்கிக் கொண்டபொழுது அவர்களிடம் எப்படிப்பட்ட சகிப்புத தன்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள் என்பதை சுருங்கப் பார்த்தோம்.


பெருந்தன்மை !!


ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது ஸைது இப்னு சனா என்கிற யூதர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுத்த கடனை திரும்பக் கேட்டு வருகிறார்.
அவ்வாறு வந்தவர் கடுமையான வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பிரயோகம் செய்கின்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மிக அருகில் அமர்ந்திருந்த அவர்களது தோழர்கள் கொதிப்படைந்து வாளை உருவிக்கொண்டு எழுகிறார்கள் அவ்வாறு எழுந்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விடுகிறார்கள்
தடுத்துவிட்டு மேலும் கூறுகிறார்கள் தோழர்களே அவரைப் பேசவிடுங்கள் அவர் என்னைப் பேசுவதற்கு உரிமை பெற்றுள்ளார் நான் அவரிடம் கடன் பெற்றுள்ளேன் மேலும் அவருக்கு கடனை திருப்பிக்கொடுக்கும் தவனையையும் நான் மீறி விட்டேன் அதனால் உரிமையுடையவருக்கு அவருடைய உரிமையை விட்டு விடுங்கள் என்றுக் கூறி தமது தோழர்களை கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.
அவ்வாறு தமது தோழர்களை கட்டுப்படுத்தி விட்டு இப்னு சனாவைப் பார்த்து கூறுகிறார்கள் இப்னு சனாவே இன்னும் நீங்கள் என்னை எவ்வளவு பேசவேண்டுமோ பேசுங்கள் காரணம் உங்களிடம் நான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க நான் வாக்களித்த தவனை முடிந்து விட்டதால் நான் சகித்துக் கொள்கிறேன் என்றுக் கூறிவிடுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய இந்த பெருந்தன்மை இப்னு சனா அவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்துகிறது அதற்கு மேல் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகிறார். அவ்வாறு திரும்பிச் சென்றவர் சிறிது நேரங்களிலெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருந்த அதே அவைக்கு தனது குடும்பத்தாருடன் வருகிறார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி தாமும் தமது குடும்பத்தினரும் இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறி இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார். . . .அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். அல்குர்ஆன் 5:119இப்னு சனா அவர்கள் இஸ்லாத்தில்; இணைந்து கொள்வதற்கு நபிகளாரின் பெருந்தன்மை ஒருக் காரணமாக அமைந்து விடுவதுடன் மேலும் ஒருக் காரணத்தையும் அவ்விடத்தில் அவர் கூறுகிறார் இதற்கு முந்தைய வேதங்களில் இறுதி நபியுடைய வருகையை படித்துள்ளேன் அதில் இறுதி நபியிடம்; அதிகமான சகிப்புத் தன்மையும், பொருமையும் இருக்கும் என்று எழுதப்பட்டதை வாசித்திருக்கிறேன் அதை இந்த நபியிடம் சோதிப்பதற்காகவே அவ்வாறான கடுமைத் தனத்துடன் நடந்து கொண்டேன் முந்தைய வேதங்கள் கூறிய சகிப்புத் தன்மையும், பொருமையும் இந்த நபியிடம் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டேன் அதனால் அவர்கள் கொண்டுவந்த சத்திய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் எனவும் கூறினார்.
இதைக்கேட்டு நபித்தோழர்கள் நெகிழ்ந்து போனார்கள் நபிகள் நாகயம் கையாண்ட பெருந்தன்மையை அவர்களது பிரிவிக்குப் பின் அவர்களும் தங்களுடைய ஆளுகையின் கீழுள்ள மக்களிடம் கையாண்டார்கள் அதனால் அவர்களிடத்திலும் அன்றைய வல்லரசுகள் மண்டியிட்டன.
இதன் மூலம் முஸ்லிம்கள் பெறும் படிப்பினைள்
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே !
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார் ? அதை அவருக்கு பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். .. 2:245பொருள் வசதியற்ற தேவையுடைய மக்களுக்காக, பொருள் வசதியுள்ளவர்கள் மீது கடனை கடமையாக்கினான். அழகிய முறையில் அவரிடமிருந்து வாங்கியது போல் குறிப்பிட்ட தவனையில் அழகிய முறையில் திருப்பி தந்து விடவேண்டும். திருப்பிக் கொடுக்கும் தவனை வரும்போது ஓடி ஒளிந்து விடக்கூடாதுகடன் பெறுவதற்காக கடன் கொடுப்பவரிடம் பேசிய பவ்வியமான வார்த்தைகள் கடனை திருப்பிக் கொடுக்கும்போதும் கையாளவேண்டும். கடன் திருப்பிக் கொடுக்கும் தவனை முடிந்து கடன்காரர் கடனை திருப்பிக் கேட்க வரும்போது கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் வாங்கும் Nபுhது பேசிய பவ்வியமான வாரத்தைகள் கொடுக்கும் போது பேசுவதில்லை வித்தியாசமாக பேசுவதும் சில நேரங்களில் முடிந்தால் பார்த்துக் கொள் என்றுக் கூறுவதையும் இன்று கண்டு வருகிறோம். அது மட்டுமல்லாது கடன் காரன் கடனை கேட்கும்போது இவருடன் யாராவது கூட இருந்து விட்டால் அவரை வைத்துக் கொண்டு ஏன் கேட்டாய் ? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று வரட்டு கௌரவம் பேசுவார்கள் இதையேக் காரணமாக்கி இன்னும் இழுத்தடிப்பார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனை ஒப்பந்தம் செய்து கொண்ட தவனையில் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வரும்போது இப்னு சனா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முன்னிலையில் தான் கடுமையாக நடந்துகொள்கிறார்.எனது தோழர்கள் முன்னிலையில் எவ்வாறு நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாம் என்று கடிந்து கொள்ளவில்லை.
கடனை குறித்த தவனையில் செலுத்தி விடவேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு சனா அவர்களுடைய செயல்பாட்டை அங்கீகரித்தன் மூலம் நபிகள் நாயகத்தின் உம்மத்துக்களாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு இறை நம்பிக்கையாளரின் கடன் நிறைவேற்றப்படும் வரை அவரது உயிர் அவரது கடனுடன் தொங்கிக் கொண்டிருக்கும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
வாங்கிய கடனை குறிப்பிட்ட தவனையில் திரும்ப செலுத்தி விட முடியாத நிலை ஏற்பட்டால் கடன் கொடுத்தவரிடம் கடன் பெற்றவர் தனது தவனையை மேலும் புதுப்பித்துக் கொல்ல வேண்டும் கடன் கொடுத்தவர்கள் கடன் பெற்றவர்களுக்கு மேலும் பலதவகைனகளை கொடுக்கச் சொல்லி மார்க்கம் கூறுகிறது அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும். ...2:280
அல்லாஹ்வுக்காகவே, அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்தே வசதி படைத்தவர் வசதி இல்லாதோருக்கு கடன் கொடுத்து உதவுகின்றனர் கடன்பட்டவர் உண்மையிலேயே கடனை திருப்பிக் கொடு;க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் அந்த நிலையை இவர் கண்ணுறுபவராக இருந்தால் அல்லாஹ்வுக்காகவென்றே கொடுத்த கடனை தள்ளுபடி செய்து விடவேண்டும் அல்லது அதை தர்மமாக விட்டு விடவேண்டும் இவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் நன்மையை அதிகமாக்குவான் அதனால் தான் கடனைப் பற்றி சொல்லும் போது அழகிய கடன் அல்லாஹ்வுக்காக கொடுப்போர் யார் ? என்றுக் கூறுகிறான் மறுமையை நம்பி வாழக் கூடிய முஸ்லிம்கள் தன்னுடைய சகோதரனுக்கு கொடுத்துதவிய கடனை திரும்ப பெறமுடியாத பட்சத்தில் அதை தர்மமாக ஆக்கிவிடுவது மிச் சிறந்த அமல்களில் ஒன்றானதாகுமு;.நீங்கள் அறிந்து கொண்டால் ( கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையை ) அதை தர்மமாக்கி விடுவது உங்களுக்கு சிறந்தது 2:280
மேற்கத்திய சமுதாயத்தவர்களே !!
இப்னு சனா அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகத்துடன் நடந்து கொண்டவிதம் அவர்களது அருகில் அமர்நதிருந்த தோழர்களுக்கு மாபெரும் ரோஷத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது ஏற்படுத்தத் தான் செய்யும் உங்களில் எவரும் தன்னுடைய தந்தை , தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும் வரை இறை நம்பிக்கையாளராக முடியாது. என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்
அவர்களது தோழர்கள் இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய விலையை நிரணயிக்கக் கூடிய எந்தப் பொருளையும் விட தன்னைப் பெற்றெடுத்தவர்களையும் விட தன்னுடன் பிறந்தவர்களையும் விட நபிகள் நாயகத்தை உயிரிலும் மேலாக கருதியவர்களே அவ்விடத்தில் அமர்ந்திருந்தார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு முன்னிலையில் சிறிய ஒரு கடன் தொகைக்காக கடுமையான வார்த்தைகளைக கொண்டு திட்டும்பொழுது கொதிப்படைந்த தனது தோழர்களை கட்டுப் படுத்தி விடுகிறார்கள், அவர்கள் நினைத்திருந்தால் ஒரு கண் அசைவு போதும் அந்த தோழர்களுக்கு கண்இமைக்கும் நேரத்திற்குள் அடித்து கொலுவில் தொங்க விட்டிருப்பார்கள் அத்துடன் எங்களை எதிர்ப்பவர்களுக்கு அதுதான் கெதி என்று கூறியிருக்க முடியும் காரணம் இன்றிருப்பது போல் வல்லரசுகள் அன்றும் இருந்தன அந்த வல்லரசுகள் இவர்களுக்கு பயந்திருந்தார்கள் இன்றைய முஸ்லிம் நாடுகள் போல் அவர்கள் பீதியில் உறைந்திருக்கவில்லை.
இத்தனைப் பெரிய அதிகாரங்களை உடையவர்களுக்கு மத்தியில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் நபிகள் நாயகத்தை கடுமையான வாரத்தைகனைப பேசும் போது அமைதி காத்த அந்த உத்தம நபியவர்களுடைய தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தீவிரவாதியாக சித்திரம் வரைந்து வெளியிட்டீர்களே !
செய்யாத குற்றத்திற்காக ஆப்கான் மக்களையும், ஈராக் மக்களையும், லெபனான் மக்களையும் கொன்று குவித்த ஜார்ஜ் புஷ் , டோனி பிளேர் தலைப்பாகையில் குண்டுகளைக் கட்டி தொங்க விட்டு முதல் பரிசை எப்பொழுது வெல்லப் போகிறீர்கள்.
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? 3:71.
''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. 5:72 .


No comments:

Post a Comment